பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல் லா ைம 22 #9 கால் ஞானங்கள் படியப் படி! ஊனங்கள் படிய யாதும் படியாதே. உயிர் துயர் தீர்வதே உயர் படிப்பாம். உலகியல் அறிவும் உள்ளப் பண்பும் உணர்வின் தெளிவும் ஆன்ம ஞானமும் இனமா அருளுகின்ற மேன் மையான நூல்களேயே எவ்வழியும் செவ்வையாகக் கற்க வேண்டும். கற்பவை கற்க என்ற அற்புத வாக்கை எப்பொழுதும் சிங்தித்துக் கலேயின் புனிதமான தலைமை யைக் கருதி உறுதிநலனேக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. மொழிகளேப் பேசி வருவதினலேயே மக்கள் தக்கவ சாய் உயர்ந்து விலங்குகளினும் மேல் என விளங்கி கிற் கின்ருர். இலங்கிய நூல்களைக் கல்லாமல் அந்தப் பேச்சு வழக்கோடுமட்டும் கின்ருல், வாய் பேசுகின்ற ஒருவகை மிருகங்களாகவே அவர் கருத நேருவர். கலேகளே ஒதி உணர்ந்தால் த லே ைம ய ர ன மேதைகளாய் மேவி விளங்குவர். பேதைமை ஒழிவதே பெரிய கல்வி. பேச்சளவில் நின்ருர் பிழையாய் இருநிலத்தே மூச்சளவில் வந்து முடிந்திழிந்தார்-பேச்சொடுநூல் கற்ருர் உயர்ந்து கருதிய சீரெல்லாம் பெற்ருர் பெருமை பெரிது. கல்வியாலேயே மனித இனம் மாட்சி யடைந்து வருவதை இதல்ை அறிந்து கொள்கிருேம். கற்பது கற் பக தருவாய் அற்புத கிலேகளே அருளுகிறது. சால்பு டைய நூல்களேக் கற்பதில் மேலோர்களுடைய அறிவு கலங்களும் நெறி நியமங்களும் நேரே மருவி வருகின் றன. அவ் வரவால் பெருமகிமைகள் உளவாகின்றன. நல்ல முறைகளேக் கல்லாது விடின் எல்லா மேன் மைகளும் இழிந்து போகின்றன: போகவே பொல்லாத உன்மைகள் வளர்ந்து கிளர்ந்து புலேகள் விளேகின்றன. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சவை நடுவே நீட்டோலே வாசியா நின்ருன் குறிப்பறிய மாட்டா தவன்நன் மரம். (மூதுரை 13)