பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் ல ா ைம 222歴 கல்லாத காயேன் என்று மாணிக்கவாசகரும், இராம லிங்கரும் இவ்வாறு தம்மை இகழ்ந்து மொழிங் துள்ள னர். தெளிந்த கல்வியறிவுடைய இவர் இப்படித் தாழ்த் திக் கூறியது, மெய்யான கல்விப் பயனே அடைய வேண்டியே. கல்லாதார் விலங்கு என்று தேவர் குறித்த குறிப்பை நோக்கியே கல்லாத நாயேன் என இவர் தம்மைக் குறித்துத் தாழ்வாச் சொல்ல நேர்ந்தனர். அரிய பிறப்பும் பெரிய சிறப்பும் கல்வி இல்லாமை யால் சிறுமை யடைந்து சீரழிந்து போகின்றன. அவ்: வாறு இழிந்து அழிந்து போகாமல் இளமையிலேயே கற்று வளமையுடன் உயர்ந்து கொள்ளுக. F= ஒத்த பிறப்பினராயினும் கல்லாதார், கற்ருரைப் போல் உண்மையான மதிப்பையும் உ ய ர் ங் த மாண்பையும் உரிமையுடன் ஒருமையா அடையார். இவ்வுண்மை கவுரவர் கண்ணும் பாண்டவர் பாலும் நீண்ட ஆராய்ச்சியோடு நேரே நன்கு அறிய வந்தது. ச ரி த ம் கவுரவர் என்பவர் குருகுல மரபினர். துரியோத னன் முதலிய நூறு பேர்களும் சீரோடு சிறப்பாய், வளர்ந்து வந்தனர். பாண்டு மன்னன் புதல்வராகிய பாண்டவர்கள் ஐவரும் சிறந்த குணசீலர்கள். அரச குலக் குமரர்களான இந்த இருவகையாருக்கும் கிருபா சாரியார் குருவா யிருந்தார். கல்வி கற்பித்து நல்ல முறையில் போதித்து வந்தார். தருமன் முதலிய இந்த ஐவரும் ஆர்வத்துடன் கற்ருர். அந்த நூற்றுவரும் செல்வக் களிப்பால் திமிர்ந்து திரிந்தார். கருத்துரன்றிக் கல்லாமல் உல்லாசமாய்ப் பொழுது போக்கி கின்ருர். பருவம் வந்ததும் இந்த இருதிறத்தாருடைய கல்வியறி வைத் தெரிய விரும்பி நேரே அழைத்து வீடுமர் ஒரு விவேக சோதனை செய்தார். முதலில் நூலறிவை உசாவி நோக்கினர். பின்பு ஒரு சிறு தொகைப் பொரு