பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

楚222 திருக்குறட் குமரேச வெண்பா ளேக் கொடுத்து இதற்கு வீடு நிறைந்த பண்டம் வாங்கி வைமின்' என்று குறித்துப் பிரித்து விடுத்தார். கவுர வர் சென்ருர்: வைக்கோல் பொதியை வாங்கி ஒரு மாளி கையில் செறித்து வைத்தார். ஐவர் சென்ருர். குறித்த வீட்டைத் துரசி துடைத்துத் துரப்மைப்படுத்தி வாச நீர் தெளித்து நறுவிய துரபம் கொளுத்தி அழகிய தீபங்கள் ஏற்றிப் பசிய இலைகள் இனிய காய்கனிகள் நயமாக அமையவைத்து முதியோர் வரவை அன்போடு எதிர் பார்த்து நின்றனர். முன்பு அனுப்பிய பெரியவர் வந்து நூற்றுவர் இல்லை நோக்கினர்; உள்ளே நுழையாமல் வெளியே மீண்டார். அதன்பின் ஐவர் மனேயை அடைங் தார்; அது தெய்வீகமாய் விளங்குவதைக் கண்டார்: அகம் மிக மகிழ்ந்து அங்கே அமர்ந்திருந்து உரையாடி உவந்தார். இந்தப் பிள்ளேக ளுடைய அறிவை வியந்து உள்ளம் களித்த அவர் துரியோதனன் முதலிய அங்த இ&ளஞர் கிலேமையை எள்ளி அகன்ருர். பல கலைகளி லும் தலைமையான புலமை யுடையராய்ப் பாண்டவர்கள் நீண்ட புகழுடன் நிலவி விளங்கிர்ை. மடமையுடன் கொடுமையும் மண்டி வந்தமையால் கவுரவர் எங்கும் மதிப்பிழந்து கின்ருர். எவ்வளவு செல்வ நலன்களே எய்தியிருந்தாலும் கல்வியறிவு இல்லே பால்ை அவர் பொல்லாதவராய் இழிவர் என்பதை எல்லாரும் அவர் பால் அறிந்து வருந்தினர். உயர்ந்த நூல்களேக் கல்லா தவர் இழிந்த விலங்குகளாய்க் கழிந்து கெடுவர் என் பதை உலகம் காண அவர் உணர்த்தி நின்ருர், துங்க யானே முன் படுத்தினும் படுத்துக சுடர்மணிப் பகுவாய் வெம் சிங்கம் வாயிடைச் செலுத்தினும் செலுத்துக தென்புலத் தவர்கோமான் வெங்கண் மாநர கத்திடை வீழ்த்தினும் வீழ்த்துக விடை ஏறும் எங்கள் நாயக! தமிழ் அறி யாருடன் இயம்புதல் தவிர்ப்பாயே !