பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் ல ா ைம 2223。 கல்லாதவருடன் கலந்திருப்பதும் சொல்லாடுவதும் மிகவும் துயரமாம். அந்தப் புல்லரோடு சேராமலும் பேசாமலும் இருக்கும்படி ஆண்டவா! அருள் புரிக என ஈசனே நோக்கி ஒரு கவிஞர் இவ்வாறு வேண்டியிருக்கின் ருர். கல்லாமல் கழிவது எவ்வளவு பொல்லாத இழிவு: என்பதை இது இங்கு நன்கு தெளிவுறுத்தியுளது. கல்லாதா கல்லாய்க் கழிகின்ருர்; கற்ருரோ நல்லாராய்த் தேவராய் நானிலத்தில் உயர்கின்ருர்; எல்லாரும் இதை அறிந்தும் இனிதுவந்து கல்லா ரேல் பொல்லாத அவர் நிலே மை புலேயான கொலேயாமே. மான மனிதனே ஆலுைம் கல்லாதான் கான விலங்கிற் கடையாகி-ஈனம் படிந்தழி கின்ருன் படியாமல் நின்று மடிந்து கழிதல் மருள். கற்ருன் உயர் தெய்வம்; கல்லான் கடுவிலங்காய் இற்ருன் பழியுள் இழிந்து. கல்லாமல் நில்லாதே.

=

இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கல்லாதவர் பேச எழுவது பொல்லாத புலே. அவர் எள்ளி இகழ்ப் படுவார். சொல்லாமல் அடங்கி யிருப்பதே நல்லது. கல்லார் அறிவை நல்லார் மதியார். அவருடைய பெருமை சிறுமையாம். குலம் இழிவாம். அழகு பாழாம். செல்வம் புல்லிதாம். பிறப்பு பிழையாம். அவர் மக்களா யிருப்பினும் மாக்களே. I சக-வது கல்லாமை முற்றிற்று.