பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*232 திருக்குறட் குமரேச வெண்பா இன்பம் தருகிற அருமைச் செல்வம் கேள்வியே. அந்த ஞானத் திருவை நலமுடன் பேணிக் கொள்க. கேட்டல்முதல் நான்காலே கேடிலா நாற்பதமும் வாட்டமற எமக்கு வாய்க்கும்நாள் எந்நாளோ? ஞான உபதேசமான கேள்வியை நாடித் தாயுமான வர் வாடியுள்ள வாட்டத்தை இதில் உணர்ந்து கொள் கிருேம். ஆன்ம இன்பம் அருளுவது அறிய வந்தது. அனுபூதிமான்களான பெரியோர்கள் கூறுகிற அரு ளுபதேசம் மருளே எல்லாம் நீக்கி மாசறு காட்சியை அருளும் ஆதலால் அந்த அதிசய பாக்கியத்தைத் தத் துவ வித்துக்கள் எங்கும் துதிசெய்து போற்றுகின்றனர். சுருதிகள் ஒரு கோடி சொல்லினும் தோன்ருது; சொரூபா ந்ைதர்ஒர் சொல்லில் ஆனந்தம் தோன்றும். தமது ஞான குருவினிடம் கேட்ட உபதேச மொழி யை வியந்து தத்துவராய சுவாமிகள் இவ்வாறு புகழ்ந்து போற்றி உவந்து வாழ்த்தியுள்ளார். நல்ல அறிவுரைகளேச் சிறந்த செல்வமாக் கருதி உயர்ந்தோர் யாண்டும்உரிமையுடன் விழைக்து கேட்பர். இவ் வுண்மை போசராசன்பால் உணர வந்தது. ச ரி த ம். இந்த அரசன் சிறந்த நீதிமான். உயர்ந்த கலைஞன். உலகம் ஆளும் தலைவயிைருந்தும் பல மொழிகளேயும் பயின்று தெளிந்து கலேயுலகில் இவன் ஒரு திலகமாய் கிலவினன். காளிதாசன், தண்டி, பாணன், பவபூதி, மாகன் முதலிய கவிஞர்களே அருகே வைத்துக் கலேயின் சுவைகளேயே உரையாடி நுகர்ந்து உவகை மீதுார்ந்து வந்தான். பலவகையான அரிய நூல்கள் இவனது அவையில் அரங்கேறி வந்தன. புலவர்களின் தகுதியை அறிந்து பொருள்களே மிகுதியும் வழங்கி யருளினன்; கலே வள்ளல் என யாண்டும் இவன் விளங்கி நின்ருன். இவனுடைய மதியூகமும் வண்மையும் அதிசய கிலே யின. நெய் பெய்த தங்கக் கிண்ணத்தைக் கையில்