பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 223.3 ஏங் திக் கொண்டு ஒர் அழகிய மங்கை அரண்மனையின் மாளிகையுள் ஒரு நாள் சோபான வழியே மேல் ஏறிச் சென்ருள். கிண்ணம் கைதவறிக் கீழே விழுந்து படிக் கட்டுகள் தோறும் உருண்டு சென்றது. அந்த நிகழ்ச்சி யை நேரே பார்த்திருந்த இம் மன்னன் அவ் ஒலிக் குறிப் புகளே ஒரு தொடரில் அமைத்தான். டடடம் ட டம் டம் டட டம்ட டம்டம் என அக் கிண்ணம் விழுங்த ஒசையை இவ்வண்ணம் ஒர் அடியில் குறித்து மற்ற மூன்று அடி களேயும் ஏற்றபடி பாடி முடித்தருள்க என்று புலவர்க விடம் உரைத்தான். கொடுத்த குறிப்பைக் கூர்ந்து நோக்கி நேர்ந்துள்ள நிகழ்ச்சியை ஒர்ந்து வரைந்து காளிதாசன் பாடி முடித்தான். அந்தப்புரத்தில் அந்தரங் கமாய் நிகழ்ந்ததை அதி மதியூகமாய் உணர்ந்து பாடிய அந்தப் பாட்டைக் கேட்டு மன்னன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். கவியில் உள்ள எழுத்துக்களே எண்ணி நூருயிரம் பொன் வீதம் தொகுத்துக் கொடுத்தான். அக் கொடை அட்சரலட்சம் என வடமொழியில் இன்றும் வழங்கப்படுகிறது. அக்கரத்திற்கு ஒர் இலக்கம் அள்ளி அருள் வள்ளல் என்று மறுபுலங்களிலும் இவன் புகழ் பரவி நின்றது. ஒரு தினம் காளிதாசனது கவியின் சுவையையும் மதிமாண்பையும் வியந்து மகிழ்ந்து தான் வீற்றிருந்த சிம்மாசனத்தை விட்டுக் கீழ் இரங்கி நீரே இந்த அரியனேயில் அமர்ந்திருக்க வுரியவர்' என்று பரிவுடன் உரைத்தான். இப் புவியரசன் இவ்வாறு கூற வே அக் கவியரசன் கண்ணிர் ததும்பக் கனிந்து நோக்கி 'அரசர் பெரும! நீங்களே அங்கு எழுந்தருளி யிருக்க வேண்டும். உங்கள் அன்பு ஆகிய அரியனேயே எனக் குப் பேரின்ப நிலையம்' என்று ஆர்வம் மீதுர்ந்து மொழிந்தார். இருவருடைய நீர்மை சீர்மைகளேயும் ஈண்டு ஒர்ந்து உணர்ந்து உவங்து கொள்கிருேம். கலை கிலேகளில் தலைசிறந்துள்ள மேதைகளின் குணநலன்கள் யாண்டும் சுவை சுரங்து திகழ்கின்றன. கல்வியாளர் களுக்குத் தன் செல்வங்களே வாரி வழங்கின்ை ஆத லால் பொன்மாரி பொழிகின்ற புனித மேகம் என மாந்தர் யாவரும் இவ்வேந்தனே வியந்து புகழ்ந்து வந்தனர். 280