பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2237 றின் புன்மையைக் கூர்ந்து கண்டு செவி உணவின் நன் மையை ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள. வாய் என்னது வயிறு என்றது, நோய் செய்து வரு கிற அதன் கிலேயை நோக்கி. உயர்ந்தோர் வாயிலிருங் து வருகின்ற சிறந்த உறுதி நலங்களே உவந்து கேட் டுக் கொண்டு இருக்கும் போதே பசியை உண்டாக்கி அந்த அரிய கேள்வியை முழுதும் இனிது கேளாதபடி கொடிய கேடு புரியும் பெரிய பீடை யுடையது ஆத லால் வயிற்றின் கொடுமை இங்கே கடுமையா அறிய வந்தது. வயிருேடு வாழ்வது துயரமுடையது. ஒருநாள் உணவை ஒழி என்ருல் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்ருல் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைகர் என்வயிறே! உன்ைேடு வாழ்தல் அரிது. (நல்வழி 11) வயிற்ருேடு மக்கள் போராடி வருகிற புலே நிலையை ஒளவையார் இவ்வாறு குறித்துக் காட்டி யிருக்கிரு.ர். பாட்டில் பொதிந்துள்ள குறிப்புகளேயும் இயற்கை நிலை களேயும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். பசித் துய ரால் பலமுறையும் அவர் வாடி வருந்தியுள்ள அனுபவங் கள் இதில் காடியறிய வந்துள்ளன. என் வயிறே! என்று: எதிரே அழைத்து அதன் அல்லலேத் துலக்கியுள்ளார். செவிக்கு இனிய உணவாகிய கேள்வியை நுகர்ந்து னர்வெளி மிகுந்து உய்தி பெறவே இந்த மனித உடல் மருவிய/ள து. அரிய அந்த உணவைப் பருகி வருங்கால் இடையே வயிறும் பங்காளியாய் வந்து சேர்கிறது. பாக முறையில் அதற்கு உரியதைச் சிறிது கொடுத்து விட்டு வேறு எதற்கும் இடம் கொடாமல் செவிச் செல்வத்தைப் பெற்றுச் சிறந்து வருக. உணவை நாளும் விழைந்து நுகர்ந்து மாந்தர் யாண் டும் வயிற்றை வளர்த்து ஆழ்ந்த சிந்தனே யாதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். செவியுணவாகிய அரிய கேள் வியை இழந்து வாயுணவையே நச்சி வருபவர் எஸ். வழியும் மிருக இனங்களாய்ப் பெருகி வருகின்றனர்.