பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2233 திருக்குறட் குமரேச வெண்பா கேள்வி வழியே அறிவு வளர்ந்து வருகிறது: அத குல் ஆன்மா உயர்ந்து திகழ்கிறது. கேளாமையால் மடமையிருள் மண்டி வருகிறது: வரவே அந்த வாழ்வு பீடை படிந்து மூடமாய்த் தாழ்ந்து கழிகின்றது. உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அவ்வ ளவு அவசியம் உயிர்க்குக் கேள்வி என்மைல் அதனி னும் பெரிதும் தேவையாம் எனக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. பயன் உணர்ந்து பலன் பெற உயர் மொழிகள் உறுதியாய் உதவி புரிகின்றன. ஊனப் பசிக்கு உணவு: ஞானப் பசிக்குக் கேள்வி. கேள்வி உயிர் அமிர்தம் ஆதலால் உடலுணவினும் அதனை உவந்து பேணிக் கொள்ள வேண்டும். உணர் வின் சுவை உயர்ந்து இனிமை சுரந்து வருதலால் செவி உணவு அதிசய இன்பமாய்த் துதி செய்ய வந்தது. செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன். (இராமா: 5-2-132) இராமபிரானுடைய கீர்த்திகள் செவிக்குத் தேய்ை இனித்து வரும் என்பதை இதல்ை அறிந்து கொள்கி ருேம். அருள் பொறை அடக்கம் அமைதி வாய்மை துய்மை வண்மை திண்மை ஆண்மை ஆற்றல் வீரம் மானம் முதலிய மேன்மையான குணநலன்கள் அக் கோமகனிடம் குடிகொண்டிருந்தன. ஆதலால் அங் நீர்மை கஅளக் கேட்கும் தோறும் மக்கள் தக்கவராய் உயர்ந்து மிக்க மேன்மைகளே என்றும் பெற்று வருகின்றனர். செவிக்கு உணவு எது? அது உயிர்களுக்கு என்ன செய்து வரும்? என்பதை இன்னவாருன, காட்சிகளால் ஒரளவு அதனை நன்கு உணர்ந்து கொள்ளலாம். கல்வியாளரினும் கேள்வியாளர் மேன்மையாள ராய் விளங்கி வருகின்றனர். பல மேதைகளுடைய உணர்வுரைகளேச் செவியுணவாகப் பருகி வருபவர் அதிசய மேதைகளாய்ப் பெருகி மிளிர்கின்றனர்.