பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2241 திருந்த இவர் பல கலைகளேயும் தெளிவாக ஆய்ந்து வந்தார். தேர்ந்த கல்வியாளரா யிருந்தும் சூதமுனிவர் முதலிய மாதவர்களிடம் நாளும் அரியபல உறுதிநலங் களே விழைந்து கேட்டார். கேள்வியை அரிய பெரிய ஒரு ஞான வேள்வியாப்பேணி எவ்வழியும் உரிமையுடன் கருதித் தரும நீர் மைகளில் தழைத்து விளங்கினர். முப்புரி நூலர்; குண்டிகைக் கரத்தர்; மோனமுத் திரையர்; அஞ்செழுத்தே வைப்பெனு மனத்தர்; பூதி கண்டிகையும் வயங்கிய நயங்கொளும் வடிவர்; இப்புவ னத்தில் உயிரனேத்தும் தம் இன்னுயிர் என்ன வே பேணும் தப்பிலா நெறியன் புடைய அந்தனர்;ஆ சாரசீலத்தர்; மெய்த்தவத்ததர். (1) குடைகொளும் கரத்தர்; செந்துவின் குலங்கள் குவலயத் திறுமெனக் குந்தும் நடைகொளும் பதத்தர்; ஐவகை யிடத்து நான்றிடும் உரோமத்தர்; நார்ப்பட்டு உடைகொளும் மருங்குல் உடையர்; பொற் புரிபோல் ஒளிர்தர நீண்டசெங் குஞ்சிச் சடைகொளும் முடியர்; தத்துவ ஞானத் தன்மையர்; நன்மை ஆதரிப்பார். (சிவரகசியம்) இவ்வாறு நீர்மை சீர்மைகளில் நிலவி நின்றவர் கல்வி கேள்விகளேயே உறுதிகலங்களாகக் கருதி ஒழுகி னர். ஒருமுறை சூதமுனிவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் 2 ன வையும் மறந்து விட்டார். கேள்வியையே விழைந்து கேட்டார். செவிக்கு உணவு இல்லாத போது தான் வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி நின்ருர். வாயுனவே நாடி வயிறு வளர்த்துவரின் பேயுணர்வே நீடிப் பெருகுமால்-நாயுணவா நீண்டு கழியாமல் நித்தலும் கேள்விநலம் பூண்டு தெளிக புலன். 281 -