பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

三2262 திருக்குறட் குமரேச வெண்பா இவ்வுண்மை வியாச முனிவர் பால் தெரிய வந்தது. ச ரி த ம் தருமர் அரசிழந்து வனம் புகுந்து மனம் தளர்ந்து தம்பிய ரோடு ஒரு சோலேயில் தங்கி யிருந்தார். கிலே மையை கினேங்து நெஞ்சம் கவன்ருர். அரசகுமரராய்ப் பிறந்தும் காட்டு வேடர் போல் அடவியில் அலேந்து திரியும்படி நேர்ந்ததே! என்று துணேவர்களே நினைந்து இரங்கினர். பதின்மூன்று வருடம் கானகத்தில் வாழ வேண்டிய கால கிலேகளே எண்ணிச் சாலவும் மறுகினர். இவ்வாறு உள் ள க் கவலேயோடு உளேந்திருக்கும். பொழுது அங்கே வேதவியாசர் வந்தார். அம்மாதவரைக் கண்டதும் இவர் அன்பு மீ துர ர் ங் து வணங்கினர். அல்லல் உழந்திருக்கின்ற இ வ. ர து உள்ளத்தின் இயல்பை ஒர்ந்து அவர் உரிமையுடன் உசாவினர். ‘‘மெய்த்திருவந் துற்ருலும் வெந்துயர்வந் துற்ருலும் ஒத்திருக்கும் உள்ளத் துர வோனே!-சித்தம் வருந்தியவா என் என்ருன் மாமறையால் உள்ளம் திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து. ’’ சத்தியசிலரான தருமர் சித்தம் கலங்கி யிருப்பதை உய்த்துணர்ந்து முனிவர் இ வி வா று வினவவே துரியோதனன் செய்த கொடுமைகளே எல்லாம் இவர் குறித்து உரைத்தார். அவர் ஆறுதல் கூறித் தேற்றினர். "உயிர் வாழ்வு துயரங்களால் நிறைந்தது. உடம்புகள் மருவிய பொழுதே இடும்பைகள் பெருகி யுள்ளன. தம் அரசை இழந்து அடவியில் புகுந்து அருங்துயர் உழந்து திரிந்த அரசர்கள் பலர் உளர். விதி யாரையும் விடாது, தன் பயனே எவர்க்கும் எவ்வகையிலும் உறுதியா அது ஊட்டியே திரும் ' என உணர்வுரை கூறினர். செறிந்தவர்க்கு ஊற்றம் கோலாம் செய்வத முனியும் முன்னே குறிந்தன நிகழ்ந்தது எல்லாம் கூறுதல் கொடிது பாவம் பிறிந்தன தாபம் தன்னில் பெரும்பகை இனிது என்று அன்ருே அறிந்தவர் உரைத்தார் ஐய! அவாவினுக்கு அ ைதி யுண்டோ? (1}