பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2266 திருக்குறட் குமரேச வெண்பா விளக்கியுளது. செவிவழியான கேள்வி எவ்வழியும் நன்மை தருவதாக நாடிக் கொள்ள வேண்டும். உடலின் பசிக்கு உணவுபோல் உயிரின் பசிக்குக் கேள்வி அமைந்துள்ளமையால் சுவை தெரிந்து அதனை துகர்ந்து வருபவர் உணர்வொளியும் உறுதிகலனும் பெற்று உயர் கிலேயை அடைகின்றனர். சிறிது கேட்டாலும் அதல்ை பெருமை உண்டாம் என்றது கேள்வியின் இயல்பும் உயர்வும் உணர வந்தது. தினே அளவு கேள்வியும் சீவ ஒளியாம். காட்சியால் கண்ணும், பேச்சால் வாயும், மாட்சி யுறுதல் போல் கேள்வியால் காது மகிமை யுறுகின்றது. மனிதனுக்கு வாய்ந்துள்ள அவயவங்கள் ஆன்டி ஊதியங்கள் தோய்ந்து பான்மை வாய்ந்து வரும் போது தான் மேன்மை பெற்று வருகின்றன. தோயாவழி யாதும் பயனிலவா யிழிவுறு கின்றன. உண்ன வயிறும் உரையாட நாவும் போல் எண்ண மனமும் இனிதுறினும்-வண்ணமிகு காது வழியாக் கலேயுணர்வு கேளாதார் ஏதும் அறியார் இதம். செவி வாயிலாக கல்லவை கேட்டவரே அறிவு நலம் உடையராப் உயர்நிலைகளே அடைகின்றனர். அல்லா தார் அவமே இழிகின்ருர். காது கேள்வியில் கனிந்து வர மேதை மிகவும் விளங்து வருகிறது. கல்வியால் வருகிற அறிவினும் கேள்வியால் பெறு கிற அறிவு தெளிவாம். வருந்திக் கற்க வுரியது கல்வி: அந்த வருத்தம் கேள்வியில் இல்லே. எதையும் எளிதே கேட்டு இனிது தெளிந்து உயர்ந்து கொள்ளலாம். பல காலமும் பயின்று பெறவுரிய அறிவைச் சிறிது பொழுது கேட்பதால் அடையலாம் ஆதலால் அதனேக் கூர்ந்து கேட்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லார்க்கும் கேள்வி நல்ல பயனே அருளி வருதலால் கல்லாதவரும் இதல்ை பயனடைந்து வியனுய் உயர்ந்து: கொள்ளுகின்றனர்.