பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空272 திருக்குறட் குமரேச வெண்பா கேள்வியாளர் இழிந்த மடமைகளே எவ்வகையிலும். பாண்டும் யாதும் கூருர் என்பார் பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் என்று ஒதியருளினர். பிழையாய் யாதும் அவர் உணர மாட்டார் என் பதை உம்மை உறுதியாக ஈண்டு உணர்த்தி நின்றது. அரிய பல கேள்விகள் தெளிவான பெரிய அறிவு: களே அருளிவரும். மெய்யுணர்வு நிறைந்த அந்த மேதை களிடம் பேதைமைகள் புகா ஆதலால் அவருடைய வாய் மொழிகள் யாதும் பிழையாமல் யாண்டும் வழுவாமல் தரும நீதிகளேயே தழுவி விழுமிதா விளங்கிவரும். இம்மூ ஆலகின் இருள்குடியும் ஆய்கதிர்போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்-தம்மின் உறழா மயங்கி உறழினும் என்றும் பிறழா பெரியார் வாய்ச் சொல். (புறப்பொருள்) மூவுலகும் ஒளி செய்து உலாவும் சூரியன் போல் மூன்று காலங்களேயும் தெளிவாக அறிகிற பெரியோர் வாய்ச் சொல் யாதும் பிறழ்ந்து பிழைபடாது; என்றும் உயர்ந்து ஒளிமிகுந்து வரும் என இ.து உரைத்துளது. மயங்கி உறழி னும் சிற: என்றது பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் என்பதை அடி யொற்றி வந்துள்ளது. ஞான ஒளியுடையார் வான ஒளி என வயங்கியுள்ளார்; அவ்வுண்மையை ஈண்டு துண்மையா ஒர்ந்து உணர்த்து கொள்கின்ருேம். கல்வியறிவும் கேள்வி யுணர்வும் கிறைந்துள்ள பெருந்தகை யாளரிடம் கேள்விச் சுவையை விருந்து என நுகர்ந்து கொள்க. அதனுல் திருந்திய பண்பும் தெளித்த மதியும் விளேக்து வரும். கேள்வியை மாந்தி வருகிற மாந்தர் யாண்டும் மேலான அறிவுடையவர் களாய் மேன்மையோடு விளங்கி வருகின்றனர். வண்மை இல்லே ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லே நேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லேபொய் உரை இ லாமையால்; வெண்மை இல்லேபல் கேள்வி மேவலால். (இராமா, நாட்டு 53),