பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2280. திருக்குறட் குமரேச வெண்பா கிருர். நாதங்களே நயமாய் அறிய வுரிய காதுகள் வேத காதனுடைய கீதங்களேயே வியனுக விழைந்து கேட்க வுரியன என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். செவிகள் ஆர்விப்பன சிந்தையுட் சேர்வன கவிகள் பாடுவ்வன கண்குளிர் விப்பன புவிகள் பொங்கப் புனல்பாயும் தேவன்குடி அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே. (தேவாரம்) திருஞானசம்பந்தருடைய செவிகள் இறைவன் இசைகளே நுகர்ந்து உவந்துள்ளன; அவ்வுண்மைகளே இவ்வுரைகளால் இங்கு நன்கு உணர்ந்து கொள்கிருேம். செவிகளால்ஆர நின்கீர்த்திக் கனி.என்னும் கவிகளே காலப்பண்தேன் உறைப்பத் துற்று புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத்து உன்னேயே அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே. (திருவாய்மொழி) நம்மாழ்வாருடைய செவிகள் திருமாலின் சீர் களேயே எவ்வழியும் மாந்தி மகிழ்ந்துள்ள உண்மையை இதில் ஒர்ந்து உவந்து கொள்கிருேம். மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து சோவரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவிஎன்ன செவியே? திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே? (சிலப்பதிகாரம் 2-17) மூவுலகையும் ஈரடியால் அளந்தருளிய திருமாலே இராமய்ை அவதரித்து வானும் வையமும் உய்யத் தம்பியுடன் கானகம் போய்த் தரும நீதிகளே எவ்வழியும் செவ்வையாகப் பாதுகாத்து அருளின்ை. அத்தகைய உத்தமமான வீரமூர்த்தியினுடைய கீர் த் தி க ளே க் கேளாத செவிகள் செவிகளா ? மண்செவி, மரச்செவி, புண்செவி, புலேச்செவி, மாட்டுச் செவி, ஆட்டுச் செவி, ஒட்டைச் செவி என அவை இழிந்தன என்று இளங்கோ வடிகள் இங்ங்னம் உளங்கனன்று மொழிந்துள்ளார்.