பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2284 திருக்குறட் குமரேச வெண்பா உடல் வாழ்வுக்கு உரிய செல்வத்தை ஆவலோடு ஈட்டுதல் போல் உயிர் வாழ்வுக்கு உரிய கேள்விச் செல் வத்தை யாவரும் ஆர்வத்துடன் ஈட்டிக்கொள்ள வேண் டும் என்பார் கேள்வியால் தோட்க என்று வியங்கோ ளால் விளக்கி யருளிர்ை. காது படைத்தவர் செய்ய வுரியதைக் காட்டியிருக்கும் காட்சி கருதியுணர வங்தது. கல்வியைக் கல்லாது ஒழியினும் கேள்வியால் உய்யலாம். மனிதன் செவி பெற்ற பயன் இனிய உறுதியுணர்வுகளைக் கேட்டுப் புனிதயைப் ஒழுகிப் போத முடன் உயர்ந்து உய்தி பெறுவதேயாம். ஞானமான கேள்வியை இழந்தவர் ஈனமா யிழிந்து படுவர். அவரது மூடகிலே பீடையே யாம் இவ்வுண்மை ஏனன்பால் தெரிய வங்தது. ச ரி த ம் ஏனன் என்பவன் ஒரு குறுநில மன்னன். மலே நாட்டின் மேற்கு எல்லேயில் கடலருகேயிருந்த ஏழில் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தவன். மிகுந்த மலைவளங் களேயுடையவன். செல்வங்கள் கிறைந்திருந்தும் யாதும் கல்லாமல் இவன் களித்து நின்ருன். தேக போகங்கனி லேயே மோகம் மீதுTர்ந்து அல்லும் பகலும் மாதர் களோடு மருவி மகிழ்ந்தான். ஆசையும் செருக்கும் அமைந்த நெஞ்சினன்; பெரியாரை மதியாத சிறுமதி யுடையவன். கொடிய உலோபி. பாடும் புலவரைக் கண்டால் ஒடி ஒதுங்குவான். இவனுடைய இயல்பினே அறியாமல் ஒளவையார் ஒரு நாள் இவனிடம் வங்தார். பெரிய செல்வன் ஆதலால் கல்வி அருமை தெரிந்து நல்ல பரிசில் கல்குவான் என்று நம்பியடைந்த அக்கவி யரசியை மதித்துப் பேணு மல் மறைந்து கின்ருன். மேல் மாடத்திலிருந்து கொண்டே ஊரில் இல்லை என்று சொல்லிவிடும்படி வேலையாளிடம் விளம்பி விடுத்தான். இவனது புல்லியமடமையையும் பொல்லா கிலேமையை யும் அம் மூதாட்டி தெரிந்து உள்ளம் வருங்தினுள்.