பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2288 திருக்குறட் குமரேச வெண்பா சத்தான இனிய சுவை உணவு உடலுக்கு உறுதி செய்தல் போல் நுட்பமான அரிய புதிய கேள்வி உயிர்க்கு ஒட்பமும் திட்பமும் புரிதலால் அதனையுடைய வர் அதிமதி யூகிகளாய் உயர் மகிமை பெறுகின்றனர். செவி கனிந்து வரச் செவ்வி சுரங்து வருகிறது. வ ண ங் கி ய வாயினர் = பணிவான இ னி ய மொழியினர். பணிவு பண்பாளரின் அணி. வாய் என்பது ஆகு பெயராய் இங்கே சொல்லேச் சுட்டி கின்றது. அடக்கம் அமைதி வணக்கம் பணிவு என்னும் இந்த இனிய பண்பாடுகள் நுண்மையான நல்ல கேள்வியாளருக்கே அமையும் ஆதலால் அந்த உண்மை ஈண்டு உரிமையுடன் உணர வந்தது. துணங்கிய கேள்வியர் வணங்கிய வாயினராய் இருப்பர் என அடையாளம் குறித்துக் காட்டியது, உடை யாரை நேரே உணர்ந்து கொள்ள. நுண்ணிய நூலறி வும் துணங்கிய கேள்வியும் இணேந்து வருபவர் அதிசய மதிமான்களாய்ச் சிறந்து உலகம் துதி செய்துவர அமைதியுடன் உயர்ந்து திகழ்கின்றனர். 'வனங்கிய சென்னியன் மறைத்த வாயினன் நுணங்கிய கேள்வியான் துவல்வ தாயினுன்.’’ (இராமா: 6-4-87) அனுமான இவ்வாறு இது குறித்துளது. விபீடண னேக் குறித்துப் பேச நேர்ந்த போது இராமபிரான் எதிரே அந்த மதிமான் கின்ற நிலையைக் கவி இங்ங்னம் ஒவிய உருவமா வரைந்து காட்டியிருக்கிரு.ர். தலே வணங்கி, உடல் குனிந்து, வாப்புதைத்துப் பணிவோடு இனிய மொழிகளே இதமா உரையாடி யுள்ள உண் மையை உவந்து கண்டு நாம் வியந்து கிற்கிருேம். வணங்கிய வாயினன்; துனங்கிய கேள்வியான் என இணேங்து வந்திருப்பது ஈண்டு எண்ணி யுணரவுரியது. இந்த அருமைத் திருக்குறளே அந்தக் காவியக் கவி