பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:34 திருக்குறட் குமரேச வெண்பா உடலோடு கூடிய உயிர் வாழ்வு உயர்தரமாய் ஒளி புரிக்து வரின் அது எவ்வழியும் தெளிவாய் யாண்டும் இன்பம் சுரங்து வரும். உயிரின் உள்ளுணர்வான அறிவு: கேள்வியால் ஒளி பெற்று வருதலால் அதனைப் பெற்ற வர் பெரிய மதிமான்களாய்ப் பெருமை மிகப் பெறு கின்ருர். பெருதவர் பேதை மாக்களாய்ப் பிழைபடிந்து இழிகின்ருர், கேள்வியை ஆர்வத்தோடு ஆர்ந்து கொள் வாாதவர் அவலக் கேடராய்த் தாழ்ந்து போகின்ருர். தாளாண்மை இல்லாதார் வேளாண்மை செலுத்துவதும், தரை மேல் என்றும் வேளாண்மை இல்லாதார் மனேவாழ்க்கை நடத்துவதும், விசையம் வேட்டு வாளாண்மை இல்லாதார் மண்டுசமர்க்கு ஏறுவதும், வளர்புராணம் கேளாதார் கதிவிழைவும், விழியிலார் வழிநடக்கும் கிரமம் ஆமால். (திருக்குற்ருலத் தலபுராணம்) கேள்வி புணர்வை இழந்தவர் நன்மை தீமைகளே நன்கு அறியார்: மூட இருள் மூடி அவர் பீடையாயுழலு வர்: யாதொரு உயர்கதியும் அவர் காண முடியாது என இது காட்டியுளது. கண் இழந்த குருடன் வழி நடப் பது போல் செவி யுணர்விழந்த மடையன் புவியில் வாழ்வது. இதில் குறித்துள்ள உவமான நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் மடமை தன்ல்ை வருந்திநெஞ் சழியும் காலே உறுதிசெய் துனே யாம்; கற்ற உணர்வினை வளர்க்கும்; என்றும் இறுதியில் லாத இன்பம் ஈட்டும் ஆதலினுல் கற்று மறுவறும் ஒழுக்கம் உள்ளார்வாய்மொழி கேட்டல் வேண்டும். (விநாயகபுராணம்) கேள்வி எத்தகைய வித்தகம் உடையது? அதனே பாரிடமிருந்து கேட்க வேண்டும்? அதல்ை விளேங்து வரும் நலன்கள் எவை ? என்பதை இது சுவையா உணர்த்தியுளது. உண்மையை உணர்வது நன்மையாம்.