பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2299 ச ரி த ம் காந்தாரர் என்பவர் பரத கண்டத்தின் வடகீழ்த் திசையில் இருந்த மருகாந்தாரம் என்னும் தீவில்வாழ்ந் தவர். ஒரே இனத்தவர். நூறு கோடியர் என்னும் பெருங் தொகையினர். மாறுபாடுடையவர். அறிவு நலங் களே உவங்து பேணுமல் எவ்வழியும் பொறி புலன் களேயே விழைந்து நுகர்ந்து யாண்டும் போகவெறி களில் பொங்கி யிருந்தார். கண்டதே காட்சி; கொண் டதே கோலம் என்று குலாவி வந்த அவர் பெண்டிர் முயக்கமும் உண்டி இன்பமுமே உவந்து களித்தார். செல்வம் சேர்ந்திருந்தாலும் கல்வி நேர்ந்து நில்லாமை யால் கூர்ந்த அறிவின்றிக் கொழுத்துத் திரிந்தார். நல்ல வர் சொல்வதை யாதும் நயந்து கேளாமல் எல்லார்க்கும் அல்லல் இழைத்து வந்தமையால் உலகம் இவ ைர வெறுத்து வந்தது. இங்கனம் இருந்து வருங்கால் இராமர் இலங்கையை நோக்கி வந்தார்: இடையே கிடந்த கடலேக் கடக்க விரும்பி வருணனை நோக்கித் தவம் புரிந் தார்; அவன் குறித்த காலத்தில் வராமையால் இவர் கொதித்துக் கோதண்டத்தை எடுத்து அம்பு தொடுத் தார்: அலேகடல் நிலைகுலைந்து தவித்தது: கடலரசன் விரைந்து வந்து அபயம் புகுந்தான்: இராமர் சீற்றம் தணிந்தார். வில்லில் தொடுத்த அம்புக்கு இலக்கை ஒல்லேயில் சொல்லும்படி உரைத்தார்; காந்தார திவின ரையே அவன் கடுத்துக் குறித்தான். தீவினைகளேயே செய்து பாவகாரிகளாய் மண்டியுள்ள அவர் மே ல் பகழியை ஏவினர். இராம பாணம் விரைந்து பாய்ந்து அனேவரையும் ஒருங்கே அழித்து மருங்கே மீண்டது. அவ்வெய்யவர் மாண்டுபட்டதை அறிந்து வையம் வருந்தவில்லே, நல்ல கேள்வி யாதுமின்றிப் பொல்லாத வராய் வாழ்ந்து வந்த அவர் மாய்ந்து போனது எல் லார்க்கும் இதமாய் ஏய்ந்து நின்றது. செவியின் சுவை உணர வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் யாரும் கவலேயுருர்; அவர் ஒழிவையே உவந்து நிற்பர் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து நின்றது.