பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2306 திருக்குறட் குமரேச வெண்பா படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை இல்லேத் தாம்வாழும் நாளே. (புறம் 1881 பிள்ளைகளுடைய இயல்புகளேயும் உயர்வுகளையும் இதில் ஊன்றி நோக்கி உணர்பவர் உள்ளம் உவங்து கொள்வர். மனித வாழ்வின் இனிய நீர்மைகளைக் கூர்ந்து ஒர்ந்து யாண்டும் யாதும் குறை நேராமல் முறையோடு இவன் அரசு புரிந்து வந்தான். பொருமை கொண்ட அச சர் சிலர் இவனைப் பொருது வெல்லக் கருதி முயன்ருர்: முயன்றும் இவனுடைய அறிவு ஆண்மைகளே அஞ்சி விலகினர். கூரிய சீரிய இவனது மதி கலத்தை வியந்து யாவரும் புகழ்ந்து போற்றி வந்தார். அவ்வரவால் பாண்டியன் அறிவுடை கம்பி என்று யாண்டும் இவன் இசை பெற்று நின்ருன். நேர்ந்த பகைவர் நிலைகுலைந்து தாழவும், யாதோர் கோதும் தன்பால் நேராமலும் யூக விவேகங்களால் இவன் உயர்ந்து விளங்கினன். இவ னது அறிவு அதிசய வெற்றிகளே அருளியது. அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள் அழிக்க லாகா அரண் எ ன் ப ைத உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். அறிவின் ஒளியால் அவலவிருள் நீங்கும் கெறியின்பம் ஓங்கும் கிறைந்து. அறிவை இனிது பேணுக. 422. உள்ளம் திரியா தொடுக்கிப் பதஞ்சலிதேர் கொள்ளவுய்த்தார் என்னே குமரேசா-துள்ளியே சென்ற விடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (உ) இ-ள். குமரேசா : மனத்தை அடக்கி நடத்திப் பதஞ்சலி யார் ஏன் மாட்சி யுற்ருர் ? எனின். சென்ற இடத்தால்