பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 2307 செலவிடா தீது ஒரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவு என்க. உய்த்தல்= உயர் நிலையில் செலுத்தல். அறிவின் ஆட்சி இதில் அறிய வங்துள்ளது. போனபோக்கில் மனத்தைப் போக விடாமல் அடக் கித் திது நீக்கி நல்ல நெறியில் செலுத்துவது அறிவாம். அற்றம் உருமல் காக்கும்; பற்றலர் புகாமல் நீக்கும் என அறிவின் ஆதரவை முன்பு அறிந்தோம்; இதில் அதன் ஆட்சி முறைகளே நேரே அறிகின்ருேம். சென்ற இடம் என்றது மனம் விரைந்து போதற்கு இனமாயுள்ள பொறி புலன்களே. சுவை ஒளி ஒசை வழி களில் ஆசையாய் ஒடியுழல்வதே உள்ளத்தின் இயல் பாம். சென்றபின்புதான் அதன் செலவு நிலை தெரியும் ஆதலால் இறந்த காலத்தால் கூறினர். அது சென்ற படியே செல்ல விடின் அல்லல்கள் நேரும் ஆதலால் அதனே ஒல்லையில் அடக்கி நடத்துவதே நல்லதாம். விடாது தடுத்தல், தீது ஒருவுதல், நல்லதில் உய்த் தல் என்னும் இங்த முத்திற வினேகளே உய்த்துணர்ந்து, அறிவின் வித்தகச் செயல்களேயும் அதன் விளைவுகளே யும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். ஒருவி என்னும் வினே எச்சம் ஒரீஇ என அள பெடுத்து கின்றது. ஒருவுதல்=நீக்குதல். புலன்களில் விரைதலும், தீது படிதலும் அதன் இயல்பாம் என்பது குறிப்பால் அறிய வங்தது. மனம் இக்கவியில் வெளிப்படையாய் வரவில்லே. உய்ப்பது அறிவு என்ற தல்ை மனம் இனமாயுணர வந்தது. மனி தன யாண்டும் ஆட்டி வருவதை அடக்கி ஆள்வது அதிசய ஆற்றலாம். மனத்தின் நிலைமையும், அறிவின் தலைமையும், இந்த இரண்டுக்கும் உள்ள உறவுரிமையும், மனித வாழ்வின் மருமமும் இங்கே நன்கு தெரிய நின்றன.