பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 10 திருக்குறட் குமரே வெண்பா மாய் ஒழுகி வரவேண்டும். அறிவை மருவி வருகிற மனம் உடையார் அரிய மகிமைகளே அடைகின்றனர். அறிவுடையார் நெஞ்சு அகலிட மாவது அறிவுடையார் நெஞ்சு அருந்தவ மாவது அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்குநின் ருனே. (1) அறிவறி யாமையை நீவி அவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானை போது அறிவா யவற்றினுள் தான யறிவின் செறிவாகி நின்றவன் சீவனு மாமே. (2) (திருமந்திரம்) பொறிவாய் ஒருவி மனம் அறிவின் வழியாயின் அங்த ஆன்மா இறைவன் வழியாயின்புறும் என்பதைத் திருமூலர் இங்ங்னம் குறித்திருக்கிருர். குறிப்புரைகள் யாவும் கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணர வுரியன. மனம் மிகவும் சலனமுடையது; எவ்வழியும் சுழல் வளிபோல் சுற்றி யுழல்வது; அதனைச் செவ்விய வழி யில் இதமாய்ப் பழக்கிவரின் திவ்விய மகிமைகள் அதல்ை விளைந்து அதிசய இன்பம் சுரங்து வரும். மிகமுயன்று வருந்தாமல் சமமா கின்ற வேண்டுகொளால் தன்முயல்வால் விநோதம் தன்னல் பகர் மனமாம் சிறுமகவை நிறுத்தல் வேண்டும் பலபிறப்பில் பரிசயங்கள் அகலப் பண்ணி அகல்சுடவா தனேயுதித்தால் முயற்சி பேரும் ஐயுறினும் சுபமடைவா யதுகீ தல்ல திகழ்மன ம்போய்த் தற்பதத்தைத் தெளியு மட்டும் தேசிகனுால் சொல்வழியிற் செல்லு வாயே. (ஞானவாசிட்டம்) திய வகையில் செல்ல ஒட்டாமல் மனத்தை நல்ல வழி உயில் நயமாய்ப் பழக்கி வர வேண்டும். அவ்வாறு பழகி வரின் பிறவித் துயரங்கள். நீங்கிப் பேரின்பம் உண் உாம் என வசிட்ட முனிவர் இங்ங்னம் உண்மையான உறுதிநிலையை இராமபிரானுக்கு உணர்த்தி யிருக்கிரு.ர்.