பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ご l6 திருக்குறட் குமரேச வெண்பா 424. கண்டார் படிக்காசர் காசருயர் துண்பொருளும் கொண்டெளிதேன் சொன்னர் குமரேசா.--கண்டதனை எண் பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய். நுண்பொருள் காண்ப தறிவு. (ச.) இ-ள். குமரேசா படிக்காசரும், சிவப்பிரகாசரும் எதை யும் எளிதாகச் சொல்லி ஏன் தெளிவா யறிந்தார் ? எனின், எண் பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய் நுண் பொருள் காண்பது அறிவு என்க. அறிவுக் காட்சிகள் அறிய வங்தன. எதையும் எளிதே தெளிய மொழிந்து, பிறர் கூறு: கிற நுண்ணிய பொருள்களே விரைந்து உணர்க்க: கொள்வது சிறந்த அறிவடைமையாம். தான் என்றது சொல்லுதற்கும் காணுதற்கும் உரிய ஒருவனேக் காட்டி கின்றது. அறிவுள்ள மனிதனு: டைய பேச்சும் காட்சியும் மாட்சியாய்க் காண வந்தன. அறிவுடையான் தொழிலே அறிவின் மேல் ஏற்றிக் கூறி யது மூலநிலேயின் முதன்மை கருதி. செலச் சொல்லி என்றது .ே க ட் ட வ ர் உள்ளம் விரைந்து உணர்ந்து தெளிந்து உவந்து கொள்ளும்படி உரைத்தலே. தெளிய மொழிபவன் ஒளி மிக வுறுகிருன். தான் சொல்லுகின்ற பொருள் அறிதற்கு அரியன வாயினும் கேட்கின்றவர் க்கு எளிதே விளங்குமாறு: கூறுவதும், பிறர் கூறுவதிலுள்ள துண்பொருள்களேக் கூர்ந்து ஒர்ந்து குறிப்போடு தேர்ந்து தெளிங்து: கொள்ளுவதும் ஆர்ந்த அறிவுடையார் இயல்பாம். நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினும் சொல்லாமை-நன்மொழியைச் சிற்றினம் அல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். (திரிகடுகம் 32)