பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2320 திருக்குறட் குமரேச வெண்பா ருல் உணர்ந்து கொள்கிருேம். எங்கும் இன்சொல் இயம்பி யாண்டும் இதமே புரிய வேண்டும் என்று இவர் குறித்துள்ளமை கூர்ந்து சிந்திக்க வுரியது. ஒரு முறை நதியில் இவர் நீராடிக் கொண்டிருந்தார். இவருடைய வேட்டியை மாணவன் துவைத்து நீரில் அலசும் போது நீரோட்டம் ஈர்த்துக் கொண்டு போயது. -ஐயோ வேட்டி போய்விட்டதே' என்று அவன் பதறிக் கூறினன். இவர் அவனே நோக்கி அமைதியாய்ப் பதி லுரைத்தார். அவ்வுரை செவ்விய பாட்டாகவே வந்தது. நயமான அவ் வெண்பா அயலே வருவது கானுக. அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனேத் தப்பினுல் நம்மையது தப்பாதோ?-இப்புவியில் இக்கலிங்கம் போெைலன் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துனே. தண்ணிரில் தோய்த்து நாம் அதனேப் பலகாலமும் தப்பி வந்தோம்: இன்று அது நம்மைத் தப்பிப் போய் விட்டது; இந்தக் கலிங்கம் போல்ை என்ன! மதுரைச் சொக்கலிங்கம் நமக்குத் துனேயுண்டு என்று தயமாய்ச் சொல்லி நின்ருர், அப்பு = தண்ணிர். கலிங்கம் = ஆடை: தப்புதல்=வெளுத்தல்; தவறிப்போதல். இவருடைய மன அமைதியையும், அறிவின் கிலேயையும், மொழியின் நயங்களையும் தெய்வ பத்தியையும் இது தெளிவாய்க் காட்டியுளது. தாம் கருதிய கருத்துக்களே யாரும் எளிதே அறியும்படி இவர் தெளிவாய் மொழிந்து வங் தார். எண் பொருளவாகச் செலச் சொல்லும் திறம் இனிது அமைந்திருந்தமையால் இவர் தெளிந்த மதி புடையார் என்று எங்கு சிறந்து விளங்கி நின்ருர். சிவப்பிரகாசர் இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். தந்தை பெயர் குமாரசாமி தேசிகர். தென்மொழி வட மொழிகளி லுள்ள பலவகை இலக்கிய இலக்கணங்களேயும் இளமை யிலேயே இவர் வழுவறக் கற்றுத் தெளிவுற்றிருந்தார்.