பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2324 திருக்குறட் குமரேச வெண்பா கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல். (நாலடியார் 215) மலர்தலும் கூம்பலும் இதில் வந்துள்ளன. மரங் களில் பூக்கின்ற பூ மலர்ந்தபடியே யிருக்கும்; நீர் கிலே களில் பூக்கின்ற தாமரை குமுதம் முதலிய பூக்கள் மலர் தலும் குவிதலுமாய் மருவி நிற்கும். ஒருவரோடு செய் கின்ற நட்பு கோட்டுப் பூப் போல் இருக்க வேண்டும்: முன்பு மலர்ந்து பின்பு கூம்புகின்ற நீர்ப் பூவைப் போல இருக்கலாது என இது குறித்துள்ளது. நலமிக வுயர்ந்தோர் தம்மை நண்புறத் தழுவிக் கொள்க; நிலவிய கயத்துப் பூவை நிகர்தராது உயர்ந்த கோட்டின் அலரென அவர்பால் நிற்க; ஆக்கமிக் கடுத்த காலே மலர்வதும் வறங்கூர் காலேக் கூம்பலும் ஒழிக மைந்தா! (விநாயகபுராணம்} இந்தக் குறளின் பொருளேத் தெளிவாக விரித்து விளக்கி ஒளி செய்து இது நயமாய் வந்துள்ளது. மலர்ந்து பின் கூம்பாத கோட்டுப் பூவைப் போல் கல்லோரைக் கலந்து நண்பராயிருப்பவரே நல்ல அறி ஞர்; நீர்ப்பூவைப் போல் காலேயில் மலர்ந்து மாலேயில் மாரு யிருப்பது மதி நலமாகாது. காலேயில் ஒன் ருவர் கடும்பகலில் ஒன்ருவர் மாலேயில் ஒன் ருவர் மனிதரெலாம்-சாலவே முல்லானேப் போல முகமுமக மும்மலர்ந்த நல்லானேக் கண்டறியோம் நாம். (ஒளவையார்). அகமும் முகமும் மலர்ந்தபடியே என்றும் ஒரு கிலே யாய் கின்ற முல்லான் என்னும் கல்லானே ஒளவையாச் இப்படிப் புகழ்ந்து பாடியிருக்கிருர். கிலே திரிந்து கிற்ப வர் சிறந்த மனிதராய் உயர்ந்து திகழார். நீர்மையான நேர்மை யுடையவரே எவ்வழியும் சீர்மை யடைவர்.