பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2326 திருக்குறட் குமரேச வெண்பா தேரையார் செவ்விளநீர் உண்ணுப் பழிசுமப்பர்; நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை கோரை வாய் பொன்சொரியும் கொல்லிமலே நன்னட ஊரைவாய் மூட உலே மூடி தானுண்டோ ? மன்னனும் மனங்தெளிந்தான். ஊரவரும் உண் மையை உணர்ந்தனர். யாவரும் முதலியாரை உவந்து புகழ்ந்து வந்தார். இறுதியில் இவர் காலமானர். இவர் இறந்த போது புலவரும் விரைந்து வந்தார். மயானத் தில் அடுக்கியிருந்த சந்தனக்கட்டை மேல் இவரைக் கிடத்தி யிருந்ததைக் கண்டார். கண்ணிர் சொரிந்து கதறி அழுதார். 'அன்று நீர் என் இடையே படுத்துத் துயின்றீர்; இன்றும் எனக்கு இடம் கொடும் ' என்று தழுவிக் கிடங்தார்; உயிர் பிரிந்து போயது. யாவரும் பரிந்து வியந்தார். இருவரும் ஒருங்கே மறைந்தார். யானேதும் பிழையறியேன்; இளேயவளும் பதிவிரதை; எனினும் என்பால் ஊனேதும் உரையாமல் உள்ளன்பே பூண்டிருந்த உரிமை யாளா ! தேனேறு மலர்மார்பா ! சீனக்கா ! இன்றும் எனக் கிடம்நீ தந்து வானேறு புகழோடு வாழ்ந்துள்ளாய் வானவரும் மகிழ்ந்து வாழ்த்த. புலவர் இவ்வாறு அவரைக் கருதி யுருகியுள்ளார். உலகம் தழீஇயது ஒட்பம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு என்பதை இந்தப் பேரறிவாளர் இருவரும் பாாறிய உணர்த்தியுள்ளார். இவருடைய அறிவும் பண்பும் நண்பும் அதிசய நிலையில் துதிகொண்டு என்றும் எவரும் உவந்து வர உயர்ந்து நின்றுள்ளன. கிலே திரியார் என்றும் கெறியோ டு கிற்பர் தலையறி வாளர் தனி. மாறுபடாமல் மதியுடன் வாழுக.

  • -* ==