பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2332 திருக்குறட் குமரேச வெண்பா ஊன்றி உணர வுரியன. காட்சி யுடைய கண் மாட்சி யுடைய அறிஞர்க்கும், காண முடியாத சடம் கருத் தில்லா அறிவிலிகட்கும் ஒப்பாம். துவக்கு= உடல். அறிகல்லாதவர் = அறிய மாட்டாதவர். கல் இதில் கில் போல் ஆற்றலே உணர்த்தி நின்றது. அறியாமை கிலேயில் எல்லாரும் கல்லாய்க் கடைப் பட்டுள்ளனர். ஆவது = ஆகிவருவது; செய்யத்தகுவது; தன்மை யானது. தனக்கு உயர்வு தருவது உறவா உணரவங்தது. இன்னவாறு பல பொருள்களேயும் நன்னயமாக் கருதிக்கொள்ள ஆவது ஈண்டு அமைந்துள்ளது. ஆவது அறிந்திலேன். (பரிபாடல் 8) ஆவது துணி துனே. (பெருங்கதை 1, 36) ஆவது உரைத்தாய். (நள வெண்பா 78) ஆவது ஒன்றன்று. (மணிமேகலை 6) ஆவது போக. (இராமா, குக 17) ஆவது கருதான். (பாரதம், கிருட்டிணன் 142) ஆவது விதி யெனின். (கந்தபுராணம்) ஆவது செய்திர் . (பெரியபுராணம் 35) இவற்றுள் ஆவது குறித்துள்ள பொருள்களேக் கூர்ந்து காண்க. உறுவதை அறிவதே உயரறிவாகும். ஆவதை அறிபவன் அதிசய மதிமாய்ைத் துதிமிகப் பெறுகிருன். அவ்வாறு அறியாதவன் மதிகேடயிைழி வடைகின்ருன். உறுவது உணர்வது உய்தி உறுவதாம். ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்; ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்; ஆவது ஒன்றில்லே அகம்புறத் தென்றகன்று ஒவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே. (திருமந்திரம் 2475) ஆவது அறிவாரது உயர்வையும், அவ்வாறு அறி யாதவரின் இழிவையும் திருமூலர் இவ்வாறு குறித்துள்