பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2340 திருக்குறட் குமரேச வெண்பா கவன மில்லாத வாழ்வு கடையாயிழிந்து படுவதை அனுபவ நிலைகள் யாண்டும் தெளிவா உணர்த்தி வருகின்றன. முன்னுற உணரான் இன்னலேயுறுவன். ஒருவன் களத்தில் நெல்லேக் குவித்து வைத்திருங் தான். அன்று இரவு மழை பெய்யும் என்று குறிப்பால் எதிரறிந்து அதற்கு வேண்டிய பாதுகாப்பை கன்கு செய்திருந்தான். மற்ருெருவனும் மிகுதியான நெல்லேக் களத்தில் குவியல் செய்து வைத்திருந்தான்; இவன் எதிரறிந்து பாதும் செய்யாமல் கவனமின்றி யிருங் தான். இரவு பெய்த பெரு மழையில் எல்லாம் பாழா யது. எதிர தாக் காத்தவன் அறிவுடையவைப் நோயின்றி யிருந்தான். அவ்வாறு காவாதவன் அறிவிலியா யிழிந்து நோயுழந்து கொந்து பதைத் தான். அறிவு மங்கிய பொழுது அல்லல்கள் பொங்கி வரு கின்றன. பொருள் அழிவு முதலாகப் பல அழிவுகளும் இழிவுகளும் அறியாமையால் உளவாகின்றன. யூகமாய் எதிரறிந்து இனிது காப்பவன் அதிசய விவேகியாய் எவ்வழியும் துதி செய்யப் பெறுகிருன். இது காங் தன் பால் அறிய கின்றது. ச ரி த ம் இவன் சோழ மன்னன். காவிரிப்பூம் பட்டினத்தி லிருந்து அரசு புரிந்தவன். சிறந்த மதியூகி. கல்வி கேள்விகளில் வல்லுநன். உலகியலறிவோடு உயர் குணங்கள் பலவும் உடையவன். அகத்திய முனிவர் பால் பேரன்பு பூண்டவன். அங்த மாதவர் அருளால் மருவி வந்த காவிரி நதியைத் தனது நாடு முழுவதும் பரப்பி யாண்டும் வளமுறச் செய்தவன். பீடும் பெரு மையும் பெருகிவர இவன் அரசு புரிந்து வருங்கால் பரசுராமர் இவன் மேல் போருக்கு வந்தார்: அரச குலத்தை வேரறுத்து வருகிற அங்த மழுவாள் வீரனே எந்த வகையிலும் எதிர்த்து வெல்ல முடியாது என்று: தெளிந்து கொண்ட இவன் ஒல்லேயில் ஒரு சூழ்ச்சி செய்