பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

>35 2 திருக்குறட் குமரேச வெண்பா பேரினும் பெரியன் மிக்க பிறப்பினும் பெரியன் செல்வச் சீரினும் பெரியன் கல்வித் திறத்தினும் பெரியன் தெவ்வர் போரினும் பெரியன் மற்றெப் பொருளினும் பெரியன் யானே யாரினும் பெரியன் என்னும் என்னேயார் அடர்க்கப் பாலார். (மெய்ஞ்ஞான விளக்கம்) அகங்காரச் செருக்கு உள்ளே புகுந்த பொழுது அந்த மனிதன் வெளியே எப்படி யெல்லாம் நீண்டு. திமிர்ந்து நிமிர்ந்து திரிவான் என்பதை இவை சுவை யாய்க் காட்டியுள்ளன. கருத்தைக் கருதித் தெளிக. செருக்கெ னப்படும் இழிகுனம் சிறுமக னிடத்தே பெருக்க முற்றிடும் அஃதுறப் பெற்றவை யெல்லாம் சுருக்க முற்றிடும் உலகெலாம் வெறுத்திடும் துயர்கொண் டிருக்க வோரிடம் இன்றியே இழிகுவன் இனேந்தே. (வீரபாண் டியம்) மனிதரை மதிகேட ராக்கிச் செருக்கு இவ்வாறு. இழித்து விடும் ஆதலால் அது குற்றம் என தேர்ந்தது. பணிவு முதலிய இனிய பண்புகள் செருக்கு இருக்கும் இடத்தில் உளவாகா: ஆகவே ஆன்ற பெரியோர்களு டைய ஆதரவையும் நட்பையும் செருக்கன் இழந்து விடுகிருன். இழிபுலேகளே விழைந்து கொள்கிருன். அருந்தவர் குரவர் முன்னேர் அந்தணர் உயர்ந்தோர் தம்பால் திருந்திய வனக்க மின்மை செருக்கு; வேண்டியபக்கத்தும் பொருந்திய பொருள்கொ டாமை பொங்கிய வெகுளி காமம் விருந்துசெய் கழிகண் ைேட்டம் இவையெ லாம் விடுக மைந்தா: (விநாயகபுராணம்) தனது அருமை மகனுக்கு ஒர் அரசன் இவ்வாறு அறிவு போதித்திருக்கிருன். செருக்கு, வெகுளி, காமம் விடுக என்று குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. நாட்டை ஆள வருகிற இளவரசன் பிழைகள் இல் லாதவன யிருந்தால் அவனது பெருக்கம் பெருமிதமாய் விருத்தியடைந்து வரும்; அவனும் சிறப்புடைய பெருங்