பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2355 பால் பெருகி யிருந்துள்ளன. செருக்கும் சினமும் சிறு மையும் இல்லார் பெருக்கம் பெருமிதம் நீர்மையது என் பதை உலகம் இவனிடம் உணர்ந்து தெளிந்துள்ளது. உள்ளம் அகந்தை ஒழியின் உயரின்ப வெள்ளம் பெருகி வரும். குற்றம் கடிந்து குணம்படிந்து வாழுக. 432. ஏளுே இளவெளிமான் ஈதலின்றி ஏதமுற்ருன் கோன யிருந்தும் குமரேசா-ஈன இவறலும் மாண்பிறந்த மானமும் மான உவகையும் ஏதம் இறைக்கு. (உ) இ-ள். குமரேசா இளவெளிமான் அரசயிைருந்தும் ஈதல் இன்றி இழிந்திருந்தமையால் ஏன் ஏதம் உற்ருன்? எனின். இவறலும் மாண்பு இறந்த மானமும் மான உவகையும் இறைக்கு ஏதம் என்க. திதான ஏதங்கள் தெரிய வங்தன. செருக்கு, சினம், சிறுமைகள் தீயன என முன்பு குறித்தார்: இதில், இவறல் முதலியன இழிபிழைகள் என்கிருர் பிழை படியாமல் வாழ வழி கூறியுள்ளார். பொருளாசை மீதுர்ந்த உலோபமும், மருளான மமதையும், விண்களிப்பும் அரசனுக்கு அவலமான குற்றங்களாம். இழிவும் துன்பமும் தருவது ஏதம் என வந்தது. இவறல்=பொருள் மேல் இவர்ந்து எழுகின்ற பேராசை. ஈண்டு இது உலோபத்தைக் குறித்து நின் றது. ஈதலுக்கு இது மாருனது. ஈகை அரசனுக்கு இயல் பான உயர் குணம் ஆதலால் அதற்கு அயலான இது குற்றம் ஆயது. குற்றம் அற்றவனே கொற்றவன் ஆகிருன். இவறல்= இழிபழி: ஈதல்=உயர் புகழ்.