பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ம் க டி த ல் 23.59. முன்னேன் பிரிவுக்கு இரங்கி இப் பின்னேனிடம் அவர் பேரறிவு கூறினர். அவருக்குப் பொருள் தர வேண்டுமே என்று மறுகி இவன் மருளுடன் மாறினன். விரும்பி முகமலர்ந்து உபசரியாமல் சிறிது பொருளேப் பரிசில் என நல்கினன். இவனது புன்மையை நினைந்து புலவர் உள்ளம் கவன்ருர்; யாதொன்றும் தீண்டாமல் அயல கன்று போர்ை. அவ்வாறு எழுந்து செல்லுங்கால் தம் நெஞ்சை நோக்கி அந்தப் புலவர் பெருமான் கூறிப் போனது சீரிய மேன்மையாய்ச் சிறந்து கின்றது. எழுஇனி நெஞ்சம்! செல்கம்; யாரோ பருகு வன்ன வேட்கை யில்வழி அருகிற் கண்டும் அறியார் போல அகனக வாரா முகனழி பரிசில் .5 தாளி லாளர் வேளார் அல்லர்; வருகென வேண்டும் வரிசை யோர்க்கே; .ெ ேெத உலகம் , பேனுநர் பலரே; மீளி முன் பின் ஆளி போல உள்ளம் உள்ளவிந் தடங்காது வெள்ளென. 10 நோவா தோன்வயின் திரங்கி வாயா வன்கனிக்கு உலமரு வோரே? (புறம் 207) "மனமே! இனி நாம் செல்வோம்; நேரே கண்டும் காணுதவன் போல் முகம்மாறி கிற்கின்ற இந்த உலோபி யிடம் யாதும் கொள்ளலாகாது; தரங்தெரிந்து உதவி புரியும் தக்கோர் பலருளர்; தகாதவன் பால் வந்தது. பெரிய தவறு' என்று அரியேறுபோல் இராச கம்பீர மாய்ப் புலவர் வெளியேறி யுள்ளார். அந்த உண் மையை உரைகள் உணர்த்தி யுள்ளன. புலவர் இல் வாறு புலங்து போனதை அறிந்து பலரும் இவனே இகழ்ந்து வைதனர். இவறலும், வீண் பெருமையும். வீண்களிப்பும் உடையான் ஏதம் மிக அடைந்து இழிந்து படுவான் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்தது. இவனது இழி பழி எவ்வழியும் வெளியாய் கின்றது.