பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2362 திருக்குறட் குமரேச வெண்பா முன்னும் பின்னும் தினேபனேகள் இன்னவாறு வங் துள்ளன. தினேயின் விளேவும் உணவும் தேவர் காலத் தில் இந்நாட்டில் மிகுதியும் பரவி யிருந்துள்ளமையை இவை காட்டியுள்ளன. அறப்பால் பொருட்டால் காமப் பால் மூன்றினும் முறையே தோன்றி யுள்ளமை ஊன்றி யுணரவுரியது. அதுபவ கிலே அறிய வருகிறது. பழி நானும் பண்புடையார் இழிவு இம்மி வரினும் அழிதுயரமாய்ப் பதைத்து அலமந்து துடிப்பர். இது மருதிபால் தெரிய வங்தது. ச ரி த ம் இவள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தவள். தரும சீலன் என்னும் வேதியன் மனைவி. இவளது: காலம் அரச மரபினரை வோறுத்து வந்த பரசுராமர து காலமாம். இவள் திருந்திய பண்பும் சீலமும் வாய்ந்த வள். பேரழகுடையவள். ஒரு நாள் காவிரி நதியில் நீராடி விட்டுத் தன் இல்லே நோக்கி வந்தாள். அவ்வாறு: வருங்கால் அங்நகரை அது பொழுது ஆண்டுவங்த ககந்தன் என்னும் காவலன் மகன் இவளேக் கண்டான். அவன் பெயர் காமக்தன். காளேப் பருவத்தன், இவளது உருவ அழகில் உள்ளம் பறிபோய் மருவி மகிழ விசைக் தான்: கையை நீட்டிச் சைகை செய்து அழைத்தான். அவன் குறித்து அழைத்ததை நோக்கி இவள் குலே நடுங்கினுள். அந்தோ! என் கணவனே யன்றி வேறு எவரையும் யான் கனவிலும் கருதிலேன்: இத்தியவன் இன்று என்னைத் தீங்கு செய்ய விழைந்தான். பொல் லாத இந்தப் புலே கிலே நேர நான் என்ன பிழை செய் தேன்?' என்று ஏங்கித் தவித்தாள். பூத சதுக்கம் புகுந்து தன் உயிரைப் போக்க மூண்டாள். பூதசதுக்கம் என்பது அந்நகரின் நடுவீதியிலுள்ள ஒரு பலிபீடம். குற்றவாளிகளைப் பூதம் கொன்று தொலைக்கும் கிலேயம். அத்தகைய தரும பூதம் ஒன்று சோழ அரசரது வச பலத்தால் அங்கு கிலே பெற்றிருந்தது. ஆண்டு வந்து: மாண்டுபட நேர்ந்த இவளே யாதும் செய்யாமல் அத்தே