பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2366 திருக்குறட் குமரேச வெண்பா றம் கிகழாதா? என்று பன்னிரண்டு ஆண்டுகள் அவன் வேவு பார்த்து வந்தான். முடிவில் ஒரு நாள் மறதியால் கால்களைக் கழுவாமல் இவன் பூசை செய்ய நேர்ந்தான். அந்தச் சிறிய பிழையையே பற்றுக் கோடாகப் பற்றிக் கொண்டு அவன் பெரிய துயரங்களேச் செய்தான். இந்நகர் வரைப்பில் பாண்டும் எய்துதற்கு அரிதென் றெண்ணிச் சென்னிவான் தடவு தெய்வச் செழுமலர்ச் சோலே புக்கு மன்னவன் இழைக்கும் தீமை யாது? என மனத்தின் ஒர்ந்து துன்னருந் தான்றி மீதில் சூழ்ச்சியோ டிருக்கும் நாளில். கோவடு குருதி வேலான் கொழுஞ்சுடர் பட்ட காலச் சேவடி கழுவ லின்றிச் செய்கட ன் கழித்தல் நோக்கிக் காவலற் சேருங் காலம் கருதுபு பன்னி ராண்டு மேவரு தான்றி யுற்ற வெங்கலி மேயி னனே. (நைடதம்) குற்றம் கருதிக் கலி காத்திருந்த காட்சியை இங்கே கண்டு கொள்ளுகிருேம். சிறிய தவறும் பெரியோரிடத் தில் குற்றமாகிறது. ஞாலம் காக்க நேர்ந்த மேலான அரசர் எவ்வளவு செவ்வியராய், எத்துனே நெறியாள சாய் வாழ வேண்டும்! என்பது ஈண்டு உணர வந்தது. குற்றம் உடையவர் அற்றம் அடைந்து வருந்துவர். இது வருணன் பால் அறிய வந்தது. ச ரி த ம் இவன் திக்கு பாலகருள் ஒருவன். மேற்குத் திசைக் குத் தலைவன். நீரின் அதிதேவதை. கடல்களுக்கு அர சன். வானுலகில் வருண மண்டலம் இவனுக்குத் தனி யுரிமையுடையது. இவனது இராசதானிக்குச் சித்தி சாவதி என்று பெயர். மனேவி பெயர் சேட்டை. மகன் பெயர் தருமன். புதல்வியர் சுநங்தை, வாருணி என இருவர். இந்திரன் அக்கினி இயமன் கிருதி வாயு குபோன் ஈசானன் என்பவர் இவனுடைய நண்பர்கள். சிறந்த கிலேயில் உயர்ந்த வேந்தனய் ஒளி மிகுந்து வந்த இவன் ஒரு நாள் பிரமதேவனைக் காணச் சென்ருன். அங்கு கிகழ்ந்த ஒரு வேள்வி விழாவின் பொருட்டுத்