பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237.2 திருக்குறட் குமரேச வெண்பா நெடுந்திகிலடைந்தாலும் யாராலும் அழிக்க முடியாத அரண்வலியுளது என்று இவர் அடல் கொண்டு கின்ருர். இவரது நிலைமையை எண்ணிக் கண்ணுதல் பரமன் புன்னகை செய்தார். அந்தச் சிறிய சிரிப்பு பெரிய நெருப்பாய் மூண்டு பாய்ந்து திரிபுரங்களே அடியோடு எரித்து ஒழித்தது. திருமால் பிரமன் முதல் எல்லோரும் பெருமானேப் புகழ்ந்து போற்றினர். எதிர்வதை அறியா மல் ஏமாந்திருந்தமையால் எரிந்து அழிந்தார். வரு முன் னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்து து போலக் கெடும் என்பதை யாவரும் இவரிடம் நேரே கண்டு தெளிந்தார். இவரது அழிவு உலகிற்குப் பெரு மகிழ்வாய் நலம் புரிந்து நிலவியது, விண்ணிடைத் திரிபுரம் வெந்து நீறெழப் பண்னுடைச் செந்தழல் பரப்பு மூரலாய்! எண்ணுடைக் காமனே எரித்த பேரழற் கண்ணுடைக் கடவுளே! கால காலனே! (பாரதம்) திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப உமையவள் ஒருதிற கை ஓங்கிய இமையவன். (சிலப்பதிகாரம் 6) சிவபெருமான் திரிபுரம் எரித்ததை இவை இங்ங்னம் குறித்துள்ளன. தீயவர் தீயால் தீய்ந்து மாய்ந்தனர். இன்ன லுருமல் எதிர்கோக்கி எவ்வழியும் உன்னிங் வாழ்க வுயர்ந்து. உறுவதை ஒர்ந்து உறுதி காணுக. 436. கற்ற வழுதி கதவுதொட்ட கையையேன் குற்றமென நீத்தான் குமரேசா-உற்றறிந்து தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என் குற்றம் ஆகும் இறைக்கு. (கா) இ-ள். குமரேசா தான் குற்றம் செய்ததாகப் பாண்டிய மன்னன் ஏன் தன்கையைக் கொய்தான்? எனின், தன்