பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2384 திருக்குறட் குமரேச வெண்பா இன்பம் புகழ் புண்ணியங்களே நல்க வுரிய நல்ல பொருளேப் பழியாகப் பற்றி யாதொரு பயனுமில்லா மல் பாழ்படுத்திக் கீழ்மையாய் வருதலால் உலோபி இழி பழி யாளனுய்க் கழிய நேர்ந்தான். எங்த வகையான எள்ளல் இழிவுகளும் உலோ பத்தை உள்ளே கொள்ளாது; வெளியே எள்ளித் தள்ளி விடும்; அது ஒரு மோசமான நீசம் என்பார் இவறன்மை எற்றுள்ளும எண்ணப்படுவது ஒன்று அன்று என்ருர். ஒருவனிடம் எவ்வளவு நல்ல குணங்களிருந்தாலும் உலோபம் ஒன்று புகுந்தால் அவ்வளவும் பாழாம். உளப்பரும் பிணிப்புரு உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களே அழிக்கும். (இராமாயணம்) விசுவாமித்திர முனிவர் இவ்வாறு உரைத்திருக்கி ருர். குணங்களேக் கொல்லும் கொடிய நீசம் பிசுனமே. உளப்பரும் பிணிப்பு என்றது பற்றுள்ளம் என் பதைப் பற்றி வந்துள்ளது. உள்ளம் பொருளில் மரு ளாப் மண்டி யுள்ளமையால் வெளியே எவ்வகையான எள்ளலேயும் உணராமல் மானம் இழந்த ஈனயைப் உலோபன் உறைந்து கிற்கின்றன். உத்தம குனங்கள் எல்லாம் உலோபத்தால் ஒழிந்துபோமே. உலோபத்தின் புலையான பழிநிசமும் அழிநாசமும் இதல்ை இங்கு நன்கு புலனாய் நின்றன. யாருக்கும் யாதும் உதவாதவர் ஆதலால் உலோபர் மனித வுருவில் மருவி யிருக்தாலும் இழிந்து அழிந்த வாாகவே யாவராலும் எண்ணப்படுகின்ருர். பதராகி லும்கன விபூதிவிளே விக்கும்; பழமைபெறு சுவராகிலும் பலருக்கு மறைவாகும் மாடுரிஞ்சிடும்; மலம் பன்றிகட்கு உபயோகமாம்; கதமிகு கடாவென்னில் உழுதுபுவி காக்கும்; வன் கழுதையும் பொதிசு மக்கும்; கல்லெனில் தேவர்களும் ஆலயமுமாம்; பெருங் கான்புற்றும் அரவ மனேயாம்;