பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2388 திருக்குறட் குமரேச வெண்பா உலோபத்தால் இவன் அடைந்துள்ள அல்லல்களே அறிந்து கொள்கிருேம். பற்றுள்ளம் என்னும் இவ றன்மை படுபாதகமான கொடிய நெடிய குற்றம் என் பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். ஊனமே யான உலோபம்போல் இவ்வுலகில் ஈனம் எதுவு மிலை. பழி உலோபம் இழி புலே.

=

439. வென்றிச் சடாசுரன்முன் வெம்பிப் பழிநயந்தான் குன்றினுன் பின்பேன் குமரேசா-கன்றி வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. (கூ) இ-ள். குமரேசா! தன்னே வியந்து தருக்கித் தீவினேயை நயந்த சடாசுரன் பின்பு ஏன் துன்பாய் அழிந்தான்? எனின், தன்னே எஞ்ஞான்றும் வியவற்க: கன்றி பயவக வினேயை நயவற்க என்க. அடங்கி ஒழுகும் நயம் அறிய வந்தது. தன்னே எக்காலத்தும் ஒருவன் வியக்கலாகாது: கன்மை பயவாத காரியத்தை யாதும் விரும்பலாகாது. புகழ்ச்சியில் ஒரு விருப்பம் எந்த மனிதனிடமும் இயல்பா யியைந்துள்ளது. பொருள் மேலுள்ள ஆசை யினும் புகழ் மேல் உள்ள ஆசை யாண்டும் யாரிடமும் மேலோங்கி கிற்கின்றது. மருள் மயக்கமான இங்த நசை மனிதனே வசையாத் தாழ்த்தி இழிவில் வீழ்த்தி விடும் ஆதலால் குற்றம் எனக் குறித்துக் காட்டி இதனே ஒழித்து ஒழுக வேண்டும் என உணர்த்தி யருளினர். வியத்தல்=தன்னே அதிகமாக மதித்துப் புகழ்தல்.