பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தைந்தாவது அதிகாரம் பெரியாரைத் துணைக் கோடல் அஃதாவது அறிவு ஒழுக்கம் பருவம் பான்மை மேன்மை முதலியவற்ருல் சி ற ங் த மேலோர்களேத் தனக்கு உறுதித் துனே யாக அரசன் உரிமையோடு பேணிக் கொள்ளுதல். குணமுடையாரை நாடி அறித லும் கூடி மகிழ்தலும் குற்றம் கடிந்தார்க்கே கூடும் ஆத லால் அதன் பின் இஃது இனமா அமைந்து கின்றது. 441. மண்டுபுகழ் அத்திபதி மாண்பிரம தன் மரையேன் கொண்டுவந்தான் கேண்மை குமரேச்ா-கண்ட அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (க) இ-ள். குமரேசா பிரம தருமரது கேண்மையை அத்திபதி ஏன் ஒர்ந்து உவந்து கொண்டான்? எனின், அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல் என்க. அரிய பெரிய துணேவர் அறிய வந்தனர். அறநெறிகளே உணர்ந்து முதிர்ந்த அறிவுடைய பெரியோரது கட்பை நயமாக ஒர்ந்து நன்கு தெளிந்து துணேயாக் கொள்ளுக. மாந்தரை மாண்போடு ஆளும் வேந்தன் தனக்கு ஆதரவாகத் தேர்ந்து சார்ந்து கொள்ள வுரிய சான்ருேர் களே இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். எல்லார்க் கும் பொதுவாகச் சொல்லியிருப்பினும் இயல் நோக்கி அரசனுக்குச் சிறப்பாக ஈண்டு இது கருத வந்தது. கேண்மை = கேளாங் தன்மை. உற்ற கிலேகளே உரிமையோடு கேட்டு உறுதி நலன்களேத் தெளிவாக உணர்த்த வல்ல விழுமியோரது நட்பு கேண்மை என அமைந்தது. வியஞன பலன்களே அருளி வருகிற அதன் கயனும் பயனும் இங்கே கலமாய்த் தெரிய கின்றன.