பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2047 முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது ; மறையது காரணம் மற்ருென்றும் இல்லை பறையறை யாது பணிந்து முடியே. (திருமந்திரம்) குலமகட்குத் தெய்வம் கொழுநனே ; மன்ற புதல்வர்க்குத் தந்தையும் தாயும் , அறவோர்க்கு அடிகளே தெய்வம் ; அனைவோர்க்கும் தெய்வம் இலேமுகப் பைம்பூண் இறை. (நீதிநெறி விளக்கம்) ஒருமையால் துன்பம் எய்தும் ஒருவனே ஒருமை யாலே திருமையால் முயங்கும் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி இருமையும் ஒருமையாலே இயற்றலின் இறைவன் போலப் பெருமையும் உடைய தெய்வம் பிறிதினி இல்லை யன்றே. (சூளாமணி) பாவ ராயினும் நால்வரைப் பின்னிடின் தேவர் என்பது தேறும் இவ் வையகம் காவல் மன்னவர் காய்வன சிந்தியார் நாவி னும் உரை யார் நவை அஞ்சுவார். (சீவக சிந்தாமணி) அரச னே உல கினுக்குஉயிர் ; அரசனே தருமம் ; அரச னே பெருங் கடவுளும் ; அவன் இலை என்னில், விரைசெய் மாலையாய் ! மின்னஞர் கற்பும் மெய்ப்பொருளும் உரை செய் முன்னரில் தீர்தரும் ; என்கொலோ உளவாம் ? (பாரதம்) திருவுடைமன்னரைக் காணில் திருமாலேக் கண்டேனே என்னும் உருவுடைவண்ணங்கள் காணில் உலகளந் தான் என்று துள்ளும் கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே - என னும. வெருவிலும் வீழ்விலும் ஒவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே. (திருவாய்மொழி) அாசனுடைய மகிமை மாண்புகளை இவை குறித்து வக் தள்ளன. உலகினுக்கு உயிர் அரசனே ; அவனே தெய்வம்: