பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2070 திருக்குறட் குமரேச வெண்பா தேசும் திறனறிந்த திட்பமும் தேர்ந்துணர்ந்து மாசு மனத்தகத் தில்லாமை-ஆசின்றிக் கற்றல் கடனறிதல் கற்றர் இனத்தராய் நிற்றல் வரைத்தே நெறி. எப்பிறப் பாயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லே.--அப்பிறப்பில் கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண் நிற்றலும் கூடப் பெறின். (அறநெறி: 127, 142) கற்பவை கற்று, கற்றபடி நிற்றலே ஒருவன் பெறின் அவன் பெற்ற பிறப்பு பெருமகிமை யுடைய தாம் என முனைப்பாடியார் இப்படி உணர்த்தி யிருக்கிரு.ர். குறித்துள்ள குறிப்புகளேக் கூர்ந்து ஒர்ந்து நேர்ந்து வந்து கிற்கும் கிலேகளேத் தேர்ந்து கொள்ள வேண்டும். கற்குமது உண்டு களித்தது அல்லால் நின்னருளில் நிற்குமது தந்ததுண்டோ? நீதான் பராபரமே. (தாயுமானவர்) கற்றபடி நிற்றலே கல்விப் பயன் என இது காட்டி புளது. கல்வியைத் தெளிவாகக் கற்று நல்ல வழியில் ஒழுகி எல்லாரும் உயர்ந்து உய்தி பெற வேண்டும் என்றே தாய்மை அன்பு தோய்ந்து நாயனர் வாய் மலர்ந்துள்ளார். பிழை படியாதபடி படி பீழை படியாத படி வாழு என வழி கோலியிருப்பது விழியூன்றி உணர வுரியது, ஒதியுணர்வது உயர்வு புணரவே. உள்ளம் தெளிய உணர்வு ஒளிபெற உயிர் துயர் நீங்கி உய்தியுற வுரிய நல்ல நூல்களேயே எவ்வழியும் செவ்வையாய்க் கற்றுக் கொள்க என்பார் கற்பவை கற்க என்ருர். அவை எவை? நவை யுருதவை. உணர்வு நலம் இல்லாத புல்லிய நூல்களைப் படித் தால் புன்மை புகுமே அன்றி தன்மையுருது. ஆகவே அந்த அற்பங்களே யாதும் கற்கலாகாது. நல்லதை விடுத்து கவையைக் கற்பது எவ்வழியும் அல்லலேயாம்.