பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2074 திருக்குறட் குமரேச வெண்பா எண் என்றது தருக்க நூலே. எண்ணி ஆராயும் இயல்பினது ஆதலால் இவ்வண்ணம் காண வந்தது. காட்சி கருதல் முதலியன இதில் மருவியுள்ளன. காண்டல் அனுமானம் கதை அருத்தா பத்தியிவை ஈண்டிசைத்த எண் எனவே எண். (பரம-பானு) தருக்கக் கலேயை எண் என்று இது குறித்துள்ளது. காரணப் பெயர் பூரணமாக் கருத கின்றது. எண் என்பது கணிதக் கலையையும் குறித்து வரும். எழுத்து என்றது இலக்கண இலக்கியங்களே. காதால் கேட்கும் ஒலி கண்ணுல் காணும் வரிவடிவமாக எழுந்தது எழுத்து என அழுத்தமா அறிய வந்தது. தன் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கரு தியதைத் தான் உணர்ந்து கொள்ளவும் மனிதனுக்கு இனிய கருவியாயிருப்பது மொழி. அது ஒலி உருவிலும் வரிவடிவிலும் தெளிவுற மருவியுளது. அகரம் முதலாக எழுதப் படுவது எழுத்து என அமைந்தது. எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என ஐந்து வகையாய் இலக்கணக் கலே அமைந்துளது. இந்த இலக்கணமும் தருக்கமும் கல்வியைக் கசட றக் கற்றுக் கொள்ளுதற்கு நல்ல கருவிகளாய் மருவி யுள்ளன. நூலறிவுக்கு மூலங்கள் அறிய வந்தன. வழுப்பதத்தை வாக்கினுக்கு மாற்றிவரம் ஆக்கும் எழுத்தெழுவாய் ஐந்தும் எழுத்து. (பானு) எழுத்தும் எண்ணும் கணக்குஎன்று ஆகும் எண்ணே கர ணமும் கணிதமும் என்ப. (பிங்கலந்தை) எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண்.நான்கும் பண்ணின்ற கூத்துப் பதினென்றும்-மண்ணின்மேல் போக்கினுள் பூம்புகார்ப் பொன்கொடி மாதவிதன் வாக்கில்ை ஆடரங்கின் வந்து. (சிலப்பதிகாரம்): இவை ஈண்டு எண்ணி உணர வுரியன.