பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2080 திருக்குறட் குமரேச வெண்பா மகலவுமின்றித் தம் நெஞ்சே ஏடாக இவர் கிலேபெறக் கற்ருர், ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப்படித்த விரகர் ” என்று இவர் கல்வி கற்ற கிலேயை வியந்து போற்றியுள்ளனர். கம்பரது கவிகளே மனப்பாடமாகச் சொல்லி இவர் இராமாயணப் பிரசங்கம் செய்வதைக் கேட்டுப் புலவர் பலரும் வியந்திருக்கின்றனர். நல்ல புலமையோடு சிறந்த கவிகளேயும் விரைந்து பாடுவதில் வல்லவராய் இருந்தமையால் அந்தகக்கவி வீரராகவன் என விந்தையான பெயர் பெற்று இவர் விளங்கி நின்ருர், குறு நில மன்னர் பெரு நிலக் கிழவர் முதலிய பலரிட மும் சென்று தம் புலமையைப் புலப்படுத்திப் பரிசில் பல பெற்ருர். ஈழ மண்டலம் சென்று அங்கே பரராச சேகரன் என்னும் மன்னன் முன்னிலேயில் தமது அரிய புலமையைக் காட்டிப் பெரிய பரிசில்கள் பெற்று வங் தார். சோழ மண்டலத்தில் இவர் திரிந்து வருங்கால் ஒரு நாள் காவிரி நதியை அணுகித் தாம் கையில் வைத் திருந்த கட்டுச் சோற்றைக் கரையில் வைத்துவிட்டு நீராடச் சென்ருர். உடனே அதனே ஒர் நாய் கவர்ந்து சென்றது. குளித்து வெளிவந்த இவர் அன்னத்தைக் காணுமல் கன்னத்தில் கைவைத்து கின்ருர். அருகில் கின்றவன் கிகழ்ந்ததை உரைத்தான். அப்பொழுது வயிற்றுப் பசியோடு கின்ற இவரது வாயிலிருந்து ஒரு பாட்டு வந்தது. அடியில் வருவது காண்க சீராடை அற்ற வயிரவன் வாகனம் சேர வந்து பாராரும் நான்முகன் வாகனம் தன்னே முன் பற்றிக்கவ்வி நாரா யணனுயர் வாகனம் ஆயிற்று நம்மைமுகம் பாரன்மை வாகனன் வந்தே வயிற்றினில் ப ற்றினனே.” நகைச் சுவையுடன் தம் கவிச் சுவையை இங்ங்னம் காட்டியிருக்கிரு.ர். கவிகளுடைய கற்பனைகள் விற்பனங் களாய் விளைந்து விநய விநோதங்கள் விரிந்து வருகின் றன. பல காட்சிகளே அவை காட்டியருள்கின்றன. வயிரவன் வாகனம் = நாய். நான்முகன் வாகனம்= அன்னம். நாராயணன் வாகனம் = கருடன். மைவாக னன் = அக்கினி. நாய் அன்னத்தை எடுத்துக் கொண்டு