பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 40. க ல் வி 2083

   கல்வியைக் கண் என்று முன்னம் குறித்தார்; இதில் அதனை வலியுறுத்தித் தெளிவாக விளக்கியுள்ளார். 
   கல்வியின் உயர்ந்த மாட்சியை வியந்து காணுதற்கு நல்ல காட்சி யுடையதை இணைத்துக் காட்டி உணர்த்தியிருப்பது ஊன்றி உணரவுரியது.
   கண் மிகவும் அருமையானது: பெருமை மிகவுடையது. உயிரின் ஒளி கண்வழியே வெளியே உவாவி உலக வாழ்வை நடத்தி வருகிறது. உயிரோடு உயர்வாக எண்ணி எவ்வழியும் எவரும் கண்ணை உரிமையுடன் உவந்து புகழ்ந்து போற்றி வருகின்றனர்.
   எல்லாக் காட்சிகளையும் கண்டு மகிழ்தற்கும் கருதியுணர்தற்கும் இனிய கருவியாயுள்ளமையால் அரிய பெரிய மகிமைகளை இயல்பா எய்திக் கண் உயர்வாயுள்ளது. அதிசயமான அருமைப் பொருளைக் குறித்துப் பேச நேர்ந்தபோது கண்ணையே மேலோர் உவமை கூறி யாண்டும் மேன்மையா விளம்பி வந்துள்ளனர்.
   
   கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே 
   கதிக்கான மோன வடிவே!
   கடவுளைக் குறித்துத் தாயுமானவர் இவ்வாறு பாடியிருக்கிறார். இறைவனைக் கருதியிருப்பது உணர வுரியது.
   கண்ணின் மணியே! உயிர்க்களியே! 
   கருணைப்புயலே! சுகக்கடலே!
   முருகப்பெருமானைச் சிதம்பர சுவாமிகள் இங்ஙனம் துதித்திருக்கிறார். இத்தகைய கண்ணையும் கல்வியையும் ஒரு துலையில் வைத்து நேரே நிறைதூக்கி உண்மை நிலையை உலகம் அறியத் தேவர் உணர்த்தியுள்ளார். கல்வியை இழந்தவன் கண்ணை இழந்த கபோதி என்றதனால் கல்லாமல் நின்றவர் எவ்வளவு அழிகேடுகளை அடைந்து பழி நிலைகளில் இழிந்து ஒழிந்து போகின் றனர் என்பது தெளிந்து கொள்ள வந்தது.
   கல்லாதவர் முகத்தில் ஒளிவிழிகள் அமைந்திருந்தாலும் அவை நல்ல கண்கள் அல்ல; பொல்லாத புண்களே; புலையான புல்லிய நோய்களேயாம்.