பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2497 அயன் புதலவன் தயரதனே அறியாதார் இல்லை; அவன் பயந்தகுலக் குமரரிவர் தமையுள்ள பரிசெல்லாம் நயந்துரைத்துக் கரையேற நான்முகற்கும் அரிதாம்;பல் இயந்துவைத்த கடைத்தலேயா யான்றிந்த படி கேளாய்! துனியின்றி உயிர்செல்லச் சுடராழிப் படைவெய்யோன், பனிவென்ற படியென்னப் பகைவென்று படிகாப்போன்; தனுவன்றித் துணையில்லான்; தருமத்தின் கவசத்தான்; மனுவென்ற நீதியான்; மகவின் றி வருந்துவான்: (2) சிலைக்கோட்டு துதற்குதலைச் செங்கனிவாய்க் கருநெடுங் (கண், விலைக்கோட்டும் பேரல்குல் மின்னுடங்கும் இடையாரை முலைக்கோட்டு விலங்கென்றங் குடனணுகி முன்னின்ற கலைக்கோட்டுப் பெயர்முனியால் துயர்நீங்கக் கருதின்ை. தார்காத்த நறுங்குஞ்சித் தனயர்கள் என் தவமின்மை வார்காத்த வனமுலேயார் மணிவயிறு வாய்த்திலரால்; நீர்காத்த கடல்காத்த நிலம்காத்தேன் என்னிற்பின் பார்காத்தற் குரியாரைப் பணிநீ என் றடிபணிந்தான். (4) அவ்வுரைகேட் டம்முனியும் அருள்சுரந்த வுவகையனுய் இவ்வுலகம் அன்றியே எவ்வுலகும் இனிதளிக்கும் செவ்வியிளஞ் சிறுவர்களைத் தருகின்றேன்; இனித்தேவர் வவ்விநுகர் பெருவேள்விக்கு உரியவெலாம் வருகென்ருன். (இராமாயணம் 1-11) தசரதனுடைய அருமை பெருமைகளேயும் புத்திரப் பேறுகளையும் குறித்து சனக மன்னனுடைய இராச சபையில் விசுவாமித்திர முனிவர் இவ்வாறு கூறியிருக் கிருர். தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி வினே செய்பவர் அரிய பொருள்களே அடைந்து கொள்ளுவர் என்பதை இவனிடம் அறிந்து மகிழ்ந்து கொள்கிருேம். குவலயாசுவன். இவன் சூரிய குலத்து அரசன். சத்துருசித்து என் லும் மன்னன் மகன். சிறந்த அறிவும் மிகுந்த துணிவும் உடையவன். குதிரை ஏற்றத்தில் எ வ ரு ம் தனக்கு கிகரில்லாதவன். அதிசய வீரன் என்று துதிகொண் டிருந்த இவன் மதிநலம் வாய்ந்த மந்திரிகளே மதித்துப் 313