பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2499 பொருளே இழக்க வுரிய காரியத்தை அறிவுடையவர் . செய்யார். அறிவின் பயன் அறிய வந்தது. ஆக்கம்= இலாபம்: ஊதியம். மேல் வரவாய் ஆகி வருவது ஆ க் க ம் என வந்தது. கருதி= ஆவலோடு அவா வி. முதல்=மூலதனம். தன்னேயுடையவனே முதன்மை யாகச் செய்வது ஆதலால் பொருள் முதல் என நேர்ந் தது. விளைவுக்கு உரிய மூல வித்து முதல். முதலே வைத்துத்தான் ஊதியம் சம்பாதிக்க வேண் டும். முதல் இல்லையால்ை ஊதியம் உறுவது இல்லை. முதல் இலார்க்கு ஊதியம் இல்லே. (குறள் 449) முதலுக்கும் ஊதியத்துக்கும் உள்ள உறவுரிமை களே இதல்ை உணர்ந்து கொள்கிருேம். இது நெறியான முயற்சிக்கு உரிய சரியான குறியாம். இவ்வாறு முறையான துறையில் புகாமல் பிழை யான வழியில் பேராசை மண்டிப் பேரூதியம் பெறக் கருதும் ேப ைத க ளே க் கருதி ஆதரவோடு இது நீதி நெறியைப் போதித் துள்ளது. பொருளாசை மனிதரிடம் மருளாய் மருவியுளது. ஒன்று கொடுத்தால் பத்து வரும் என்ருல் அதில் எத்த கையோரும் பித்தராய்ப் பேயராய்ப் பறந்துழலுவர். சூதாட்டம் குதிரைப் பங்தயம் முதலிய புலே நிலை களில் மனிதர் வெறியராய் மறுகி அலைவது பரிதாப மாய்ப் பெருகி யுளது. கொடிய நசை நெடிய வசையாய் கீசமான நாசமாய் நிலவிவருகிறது. உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளே உரிய முயற்சியுடன் ஈட்டிக்கொள் வதே நல்லது. பொல்லாத புலேவழியில் புகுவது என் றும் அல்லலே யாம். முதலோடு, ஊதியமும் சேர்ந்துவர ஒர்ந்து வினை புரிவதே தேர்ந்த வணிக முறையாம். வாணிகம் ஒன்றும் தேற்ருய்! முதலொடுங் கேடு வந்தால்