பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2500 திருக்குறட் குமரேச வெண்பா ஊணிகந்து ஈட்டப் பட்ட ஊதிய ஒழுக்கி னெஞ்சத்து ஏணிகந்து இலேசு நோக்கி யிருமுதல் கெடாமை கொள்வார்; சேணிகந்து உய்யப் போநின் செறிதொடி ஒழிய என்ருர். (சீவகசிந்தாமணி 770) முதல் கெடாமல் பேணிக் கொள்வது வ ணி க ர் இயல்பு; அந்த முறையை உணர்ந்து நீ உய்ந்து போ: ஒரு பெண்ணேப் பெறக்கருதி உன் உயிரை இழக்காதே என்று ஒரு வணிக வீரனே நோக்கி மன்னர் இன்னவாறு பேசியிருக்கின்றனர். இலேசு=ஊதியம். ஆக்கம் கருதி முதலை இழக்கலாகாது என்னும் இந்தக் குறளேக் கருத் தில் கொண்டு திருத்தக்கதேவர் இவ்வாறு பாடியிருக் கிருர். பாட்டின் .ெ பா. ரு ள் க ளே ஊன்றி புணர்ந்து உண்மையை ஒர்ந்து கொள்ள வேண்டும். உள்ளத் தெளிவை அருளி உறுதிநலனே அறிவு: உதவி வரும் ஆதலால் அறிவுடையார் இழவாகும் காரி யத்தைச் செய்யார் என்ருர் ஆக்கம் கருதி முதலே இழப்பது அறிவிலிகளின் வெறியான செயலே யாம். பேராசைப்பட்டு அறிஞர் பிழைகள் புரியார். இது தமன் பால் அறிய வந்தது. ச ரி த ம் . இவன் சூரியகுலத்து வேந்தகிைய நரசியங்தனு: டைய அருமைத் திருமகன். தாய் பெயர் இந்திரசேனே. இவன் தெளிந்த மதியூகி. சிறந்த குணநலன்கள் கிறைக் தவன். இவனுடைய மனைவி பெயர் சுமுனே. அந்த அழகியோடு அமர்ந்து இனிய போகங்களே நுகர்ந்து நெறிமுறையே இவன் அரசுபுரிந்து வந்தான். எதையும் தெளிவாய் அறிந்து யாண்டும் வினைசெய்து வந்தமை யால் இவன் ஆட்சி எவ்வழியும் மாட்சி மிகுந்து வந்தது. வபுமந்தன் என்னும் மறுபுல மன்னன் இவன் மேல் பொருமை கொண்டு இடையூறுகள் பல இழைத்து வக் தான். அவன் மிக்க வஞ்சச் சூழ்ச்சிகளுடையவன். மாய