பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.30 திருக்குறட் குமரேச வெண்பா தம் ஆற்றலைப் போற்றி ஒழுகுவதே அரசர்க்கு ஏற்றமாம். எதையும் எண்ணிச் செய்வதே நல்லது. இவ்வுண்மையைச் சாத்தகி சாற்றி நின்ருன். ச ரி த ம் . இவன் யதுகுல திலகனன சத்தியகனுடைய அரு மைத் திருமகன். திண்மையும் தீரமும் உண்மையும் நேர்மையும் உடையவன். கண்ணனுக்கு நெருங்கிய உறவினன். அந் நம்பிக்கு இவன் தம்பி முறையினன் ஆதலால் அந்த அண்ணன்பால் பேரன்பு பூண்டு யாண் டும் பிரியாதிருந்தான். இராமனுக்கு இலக்குவன்போல் கண்ணனுக்குச் சாத்தகி என்று இவ்வண்ணம் யாரும் உவந்துபுகழ்ந்துவர இவன் அவனுடன் வாழ்ந்து வந்தான். விசயன்பால் வில்வித்தை பயின்று தெளிந்தவன் ஆத லால் பாண்டவர்மேல் நீண்ட பாசம் இவன் நெஞ்சில் கிலேத்திருந்தது. அவர் வனவாசம் செய்து மீண்டு வந்த பின்பு தமது அரசுரிமையைப் பெற விரைந்தார். துரி யோதனன் பால் கண்ணனைத் துரது அனுப்பத் தருமன் விரும்பினன். கண்ணனும் இசைந்தான். இவன் தடுத் தான். ஏதோ ஏழைகளேப்போல் எதிரியிடம் போப் இரங்து பெறுவது என்றும் இழிவு: மகாவீரரான விசய னும் வீமனும் வேறு பல தீரர்களும் இங்கு கிறைந்திருக் கின்றனர். பகைவரைப் பொருது தொலைத்து விருது வெற்றியுடன் அ ர ைச ப் பெறுவதே பெருமையாம். எள்ளலுறும் எதையும் கொள்ள லாகாது. அருங்திற லாண்மையே அரசர்க்குப் பெருங்திரு'என்று இவ்வாறு திருந்த உரைத்து மேலும் விறலோடு விளக்கினுன். தண்டிருந்தது இவன் கரத்தில்; தனுவிருந்தது அவன்கரத்தில்; வண்டிருந்த பூங்குழல்மேல் மாசிருந்த தென இருந்தாள்; கண்டிருந்தீர்! எல்லீரும்! கருதலர்பால் ஊர் வேண்டி உண்டிருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர்? உரையிரே! (1)