பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2536 திருக்குறட் (கமரேச வெண்பா கருமம் புரிபவர் கருத வுரியன காண வந்தன. செய்யத் தக்கதையும் அறிய வுரியதையும் கருதி யுணர்ந்து உறுதியுடன் வினேயில் புகுவார்க்கு முடியாத கருமம் யாதும் இல்லே. அறிவது என்றது வினேசெய்ய நேர்ந்தவர் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டிய உறுதிகலன்களே. வினைத்திறன்கள் எல்லாம் விவேக விநயங்களால் விளைந்து வருகின்றன. எந்த மனிதனிடம் இவை தெளி வாக அமைந்துள்ளனவோ அந்த மனிதன் ஒளிமிகுந்து உயர்ந்து வருகிருன் சிறந்த செல்வங்களெல்லாம் அவ னிடம் விரைந்து வந்தடைகின்றன. எதையும் அவன் வினையாளரை கண்டு உய்த்துணர நேர்ந்துள்ளோம். காரியங்கள் எல்லாம் சீரிய நிலையில் அமைந்துள்ள காரணங்களால் பூரணம் அடைந்து வருகின்றன. முன்பு தன் வலி, பகை வலி, துனே வலிகளே எண்ணி வினேசெய் என்ருர், இதில் இயல்வதை ஒர்ந்து உணர்ந்து நயமாகச் செய் என்கின்ருர். செயல் வகைகளைத் தெளிவுறுத்தி யருளிர்ை. ஒல்வது= இயல்வது: பொருந்துவது: இசைவது. இது ஒல் என்னும் வினையடியாய்ப் பிறந்த பெயர். ஒல்லுவது என உடன்பாட்டிலும் ஒல்லாது என எதிர் மறையிலும் விதிமுறையே வரும். ஒல்லும் வகையான் அறவினே. (குறள், 33) ஒல்லும்வாய் எல்லாம் வினேநன்றே. (குறள், 673) ஒல்லும் கருமம் உடற்றுபவர். (குறள், 8.18) ஒல்லுவது ஒல்லும் என்றல் ஒல்லாது இல் என மறுத்தல். (புறம் 196) ஒல்லா மறவர். (பெருங்கதை 1, 56) ஒல்வ கொடாஅது ஒழிந்த பகல். (நாலடி 169) ஒல்வது அறியும் விருந்தினன். (திரிகடுகம் 26)