பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2544 திருக்குறட் குமரேச வெண்பா ஆயிரம் விலங்கலுள் அடங்கினன் முடங்கி யலம்வந்து அலறின்ை. (இராமா, வரை 72) இராவணன் ஊக்கிவந்து வரையைத்துக்கி இடைக் கண் முரிந்து இழிந்து கிடத்தலே இதில் அறிந்துகொள் கிருேம். உடைத்தம் வலியை அறியாமல் உள் ள ம் செருக்கி முனைபவர் எள்ளலடைந்து இழிவர் என்பதை உலகம் இவரிடம் தெளிந்து நின்றது. வலிநிலையை ஓராமல் வன்செருக்கால் மூண்டார் கலிவடைந்து வீழ்வர்கீழ் கைந்து. வன்மையை ஒர்ந்து தன்மையாய் வாழ். 474. வென்றிவலன் தன்னே வியந்தெழுந்தான் ஏனுடனே குன்றி யழிந்தான் குமரேசா-என்றும் அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். (ச) இ-ள் குமரேசா தன்னே வியந்து தருக்கி எழுந்த வலன் ஏன் இன்னலடைந்து இழிந்து அழிந்தான்? எனின், அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் என்க. கேட்டுக்கு உரிய குறிகளே இது காட்டியுளது. தனக்கு அமைந்துள்ள நிலைக்குத் தக்கபடி நடவாத னும், வலி அளவை அறியாதவனும், தன்னைப் புகழ்ந்து தருக்குபவனும் விரைவில் அழிவான். மனிதன் அடைகிற நிலைகளுக்கெல்லாம் அவனு டைய செயல் இயல்களே மூலகாரணங்களாயுள்ளன. ஆக்கமுடைய நிலைகளே ஆக்கிக் கொள்பவன் பாக்கிய வானகிருன்; கேடான வழிகளைக் கிளர்ந்து கொள்பவன் பீடை படிந்து இழிந்துபடுகிருன். ஒழுகாமை, அறியாமை, அடங்காமை என மூன்று. மடமைகள் இங்கே தெரியவந்துள்ளன. இவை கேட்டின்