பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 25.45 அடையாளங்கள் என்று காட்டியிருக்கிருர். அறிவுக் காட்சியில் நெறி நியமங்கள் மருமமாய் மருவியிருக் கின்றன. வாழ்வு இனிதாய் வர வழிதெரிய வந்துளது. அமைந்து ஒழுகு: அளவை அறி: அடங்கி யிரு. இந்த நன்மைகளேத் தழுவி நீ ஒழுகி வந்தால் எவ் வழியும் நல்லவனுய் உயர்ந்து செல்வம் கீர்த்தி முதலிய சீர்மைகளில் சி ற ங் து திகழ்வாய். இவற்றிற்கு மாறு பாடாய் வேறுபட நேரின் அழிதுயரங்கள் நேரும். ஒழுகல் காயத்தின் தொழில்: அறிதல் மனத்தின் செயல்; வியத்தல் வாக்கின் வினே. செயலும் சொல் லும் நினைப்பின் வழியே நிகழ்வன ஆதலால் மனத்தின் முன்னும் பின்னும் முறையே அவை மருவி நின்றன. மனம் மொழி மெய்கள் நெறிமுறையே ஒழுகின் அந்த மனிதன் இனியவனப் இன்பம்மிகப் பெறுகிருன். நெறி தவற நேரின் நெடிய கேடுகள் நீண்டு கொடிய துயரங்கள் மூண்டு தோன்றுகின்றன. அகங்தையான செருக்கு அவலக்கேடுகளைப் பெருக்கி விடுகிறது. செல்வத்தில் சிறந்தவன், கல்வியில் உயர்ந் தவன், வலிமையில் மிகுந்தவன் என்று இன்னவாறு தன்னே மேலாக வியந்து தருக்கிப் புகழ்ந்து விரிந்து கிற்பவனே எவரும் கறுத்து வெறுத்து இகழ்வர். ஒருவனுடைய வியனை செருக்கு அயலே வெறுப் பை விளேத்து வருதலால் அவன் விரைந்து கெட நேர் கின்ருன். அகந்தை அழிவின் அறிகுறி. பெரியார்முன் தன்னைப் புனேந்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழும்-தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலேயாய் விந்தமலே தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. (நன்னெறி 37) வியந்து கின்றமையால் விந்தமலே இழிந்து தாழ்ந் தது: அதனே அறிந்தும் திருந்தாமல் தன்னே வியந்து தருக்கி மனிதன் கெடுவது மடமையாம் என இது குறித் துள்ளது. மலேபோல்பவரும் மமதையுறின் நிலைகுலைவர். 319