பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2556 திருக்குறட் குமரேச வெனடா தென்றல் வீசியது; அதுபொழுது அவளது கூடுதலி லிருந்து ஒரு நறுமணம் தோன்றியது; அந்தப் பரிமளம் அரசனைப் பரவசப்படுத்தியது: அது மலரின் செயற்கை யாலாயதா? இயற்கையா யமைந்ததா? என்று ஐயம் கொண்டான்: த ன து சந்தேகம் தெளியுமாறு கவி சொல்ல வல்லவர்க்கு ஆயிரம் பொன் பரிசில் தருவதாக உறுதிசெய்து அந்தப் பொற்கிழியைச் சங்க மண்டபத் தில் தூக்குவித்தான். புலவர்கள் பலர் பாடி வந்தனர். யாதும் பொருந்தவில்லே. முடிவில் தருமி என்னும் ஆதி சைவன் ஒருவன் அதைப்பெற விழைந்தான். பரமன் அருள் புரிந்து ஒரு கவியை அவனுக்கு அருளினர்: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ! பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறிஎயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ? நீ அறியும் பூவே (இறையனுர்) ஒரு ஒலச் சீட்டில் துள்ளி வந்து விழுந்த இந்தப் பாட்டை எடுத்துக் கொண்டு போய்ப் புலவர்களிடம் கொடுத்தான்; அவர் உவந்து கொள்ளவே பொன்பொதி யை எடுக்க விரைந்தான். கீரர் தடுத்தார். 'பாட்டில் பிழையுளது: பரிசில்பெற இயலாது' என்று இவர் கூறவே அம்மறையவன் மீண்டுபோய் இறைவனிடம் முறையிட்டான். பரமன் ஒரு புலவராய் உருவம் தாங்கி நேரே சங்கத்திற்கு வந்தார்; "இப்பாட்டில் என்ன பிழை யுளது?' என்று கேட்டார். சொல்லில் குற்றம் இல்லை: பொருளில் குறை உள்ளது என்று கீரர் கிளர்ந்து கூறி ர்ை. வாதம் வளர்ந்தது. கலேயறிவால் இவர் களித்துப் பேசினர்; தலையறிவால் அ வ ர் தெளித்து வந்தார்: யாதும் தெளியாமல் இவர் எல்லேமீறிப் பேசவே அங்த வல்லவர் மெல்லச் சினந்தார். இவர் இழிந்து விழுந்தார். பின்பு அருள் புரிந்து இவரது மருள் நீங்கத் தெருளறிவு தரும்படி அகத்திய முனிவரைப் பணித்தார். அந்த மாதவர்.பால் ஒதி யுணர்ந்தபின் இவர் அதிசய மேதை யாய் விளங்கினர். சொக்ககாதப் புலவராய் எழுந்தருளி