பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2559 பலநாடி நல்லவை கற்றல்;இம் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (திரிகடுகம் 21) மாட்சிமையான நல்ல வாழ்க்கை முறையை கல்லா தனர் இங்ங்னம் நன்கு வகுத்துக் காட்டி யிருக்கிரு.ர். அறிவுடைய மனிதன் இருமையும் இன்பம் மருவி வர நெறியுடன் வாழுகின்ருன். அந்த மேன்மையான வாழ்வின் பான்மை இங்கே கூர்மையாத் தெரிய வங்தது. பொருளேப் போற்றிவாழ் என்று போதிக்க வங்த வர் ஈக என்று இடையே நயமாக் கொடையை இணேத் திருக்கிருர். ஈதல் உயிர்க்கு ஊதியம் ஆதலால் தன் பொருளால் சிறப்பாக ஒருவன் ஆக்கிக் கொள்ளவேண் டிய பாக்கியத்தை இங்ங்னம் அறிவுறுத்தி யருளிர்ை. பிறர்க்கு ஈந்து வருவது புண்ணியம் ஆகின்றது. ஆகவே எல்லாச் செல்வங்களேயும் இன்பங்களேயும் ஒருங்கே அது தருகின்றது. தன் உயிர்க்கு நன்மையை நாடுபவன் பிறவுயிர்களுக்கு இதத்தைச் செய்கிருன். அந்த இதம் ஈதலில் மிகவும் நயமா இசைந்துள்ளது. இரப்பவர்க்கு ஈயக் குறைபடுமென் றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ?-பரப்பின் துறைத் தோணி நின்றுலாம் துரங்குநீர்ச் சேர்ப்ப! இறைத் தோறும் ஊறும் கிணறு. (பழமொழி 344) பிறர்க்குக் கொடுத்தால் பொருள் குறைந்துபோமே என்று மருள் மண்டியிருக்கும் உலோபிகளே நோக்கி முன்றுறையரையர் இங்ஙனம் எள்ளி யிகழ்ந்து கல்ல அறிவு நலனே உள்ளம் இரங்கி அருளி யிருக்கிரு.ர். இறைக்க இறைக்கக் கிணற்றில் நீர் ஊறி வருதல் போல் கொடுக்கக் கொடுக்கச் செல்வம் பெருகி வருமே: இந்த இயற்கை நியதியை அ றி ங் து தெளிந்து ஈங்து உயர்க: அறியாமல் இழிந்து கழிந்து உலோபியாய் ஒழிந்து போகாதே என்று உறவா உணர்த்தியுள்ளார். இறப்பச் சிறிதென்னு தில்லென்ன தென்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க-முறைப்புதவின்