பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256.2 திருக்குறட் குமரேச வெண்பா இவனுடைய செயல் இயல்களேயும் உயர்நலன்கனே யும் இதில் கூர்ந்து நோக்கி ஒர்ந்து உவந்து கொள்ளு. ருேம். கவியில் மருவியுள்ளபொருள் நயங்களேக் கருதி யுணர்பவர், அரிய பல நீர்மைகளே அறிந்து மகிழ்வர். எதையேனும் எண்ணுமல் செய்துவிட்டுப் பின்புபச்சாத் தாபமாய் எண்ணியிரங்கிய கிலே இவனது வாழ்நாளில் நேர்ந்ததில்லை. செய்து இரங்காவினைச் சேண் விளங்கும் புகழ் என்றது இவனது வினேத்திறத்தையும், எதையும் அளந்து அறிந்து ஆராய்ந்து செய்யும் சீர்மையையும். திசைகள் தோறும் பரவியுள்ள கீர்த்தியையும் விளக்கி யுள்ளது. பெருந்திருவுடையன யிருந்தும் பாண்டும் அளவறிந்தே ஈந்து வந்தமையால் என்றும் வளைேடு கின்று எவர்க்கும் இனிது வழங்கி எவ்வழியும் இன்ப மாய் இசையுடன் வாழ்ந்து வந்தான். வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண். ஒளவையார் இவ்வாறு பாடியிருக்கிருர். வளவன் = சோழன். எவ்வளவு வளமுடையணுயிர் னும் அளவறிந்தே செலவு செய்ய வேண்டும் என்பதை இந்த வேந்தன் செயலே எங்கும் நன்கு விளக்கிகின்றது. உள்ள பொருளளவை ஓர்ந்திகை செய்துவரின் வள்ளன்மை வாழ்ந்து வரும். பொருளேப் போற்றி வாழ். 478. கொண்ட வருவாய் குறுகியும்பூங் குன்றனர் கொண்டிருந்தார் இன்பேன் குமரேசா-மண்டிமேல் ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லே போகா றகலாக் கடை. (அ) இ-ள். குமரேசா வருவாய் குறுகியிருந்தும் பூங்குன்றனர் ஏன் சுகமாய் வாழ்ந்து வந்தார்? எனின், போகாது. அகலாக்கடை ஆகாறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லே என்க.